என் மலர்

    கிறித்தவம்

    வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலய அர்ச்சிப்பு விழா
    X
    வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலய அர்ச்சிப்பு விழா

    வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலய அர்ச்சிப்பு விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டதையொட்டி அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
    கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. திருச்சி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதையொட்டி அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    மேலும் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு பாடற்திருப்பலியில் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். விழாவில் சுற்றுவட்டார பங்குதந்தைகள், திருச்சிலுவை கன்னியர்கள், கோவாண்டகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுலஈஸ்வரி ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆலய உதவி பங்குத்தந்தை அருளப்பன் நன்றி கூறினார். விழாவில் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம், மல்லிகைபுரம், விரியூர் பகுதிவாழ் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×