என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடந்தது.
    உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த 3-ம் நாள் அவர் உயிர்த்து எழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும், உயிர்ப்பு பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அதற்கு முன்பாக இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை- எளியவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்வார்கள். இந்த நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும்.

    இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை- திருப்பலி நேற்று காலையில் நடந்தது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கினார். ஆயர் செயலாளர் அருட்பணியாளர் ராய், வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை குரூஸ் கார்மல், அருட்பணியாளர்கள் பெஸ்கி, அருள்ராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.

    திருப்பலியில், ஆயர் மற்றும் பங்குத் தந்தையர்கள் உள்ளிட்ட அருட்பணியாளர்கள் ‘மனம் திரும்பு, நற்செய்தியை நம்பு’ என்று கூறி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் மூலம் சிலுவை அடையாளம் வரைந்தனர்.

    இந்த திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் தின திருப்பலி நடைபெற்றன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர்.

    தவக்காலத்தையொட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை என்னும் வழிபாடு நடைபெற உள்ளது.

    இதேபோல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நடைபெறுகிறது. மேலும் அன்பியங்களில் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலிகள் நடைபெற உள்ளன.
    கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    எருசலேம் பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைபணியை தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசத்தை கடைபிடிக்கிறார்கள். இதனை தவக்காலம், லெந்துகாலம், கஸ்தி நாட்கள் என்றும் அழைப்பர். தவக்காலம் நேற்று தொடங்கியது. இதை சாம்பல் புதன் என்றும் கடைப்பிடிக்கிறார்கள். அதையொட்டி தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சை திரு இருதய பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு பேராலய பங்குத்தந்தை செபஸ்டின்பெரியண்ணன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. திருப்பலியில் புனித சடங்காக கடந்த ஆண்டில் குருத்துதோலை ஞாயிறு பவனியில் எடுத்துச்செல்லப்பட்ட குருத்தோலைகள் கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததை ஆலயங்களில் புனிதப்படுத்தி எரித்தனர்.

    பின்னர் அதன் சாம்பலை திருப்பலியில் கலந்து கொண்டவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசினர். தவக்காலம் தொடங்கி கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாள் வரை 40 நாட்கள் விரதம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் தவக்காலம், ஈஸ்டர் பெருவிழா நாள்வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும் தவக்கால சிந்தனைகளை பற்றி பார்க்கலாம்.
    “உடைகளை அல்ல, இதயத்தை கிழித்துக் கொண்டு திரும்பி வாருங்கள்“ (யோவேல் 2:13)

    உலகிலேயே மிகவும் நீளமான பயணம் என்பது மனிதன் தனக்குள் செல்கின்ற பயணமாகும். மனிதனின் சுய ஆய்வு பயணத்துக்கான காலமே, திருச்சபை வழங்கியுள்ள அருளின் காலமான இந்த தவக்காலம். கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மனமாற்றத்துக்கான காலமாக இதை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப்புதன் (சாம்பல் புதன்) அன்று தொடங்கி நாற்பது நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த காலம் நீண்ட நெடிய அர்த்தமுள்ள தயாரிப்பை, இறைவனை நோக்கிய பயணத்தை வலியுறுத்துகிறது.

    திருவிவிலியத்தில் நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. (தொ.நூ 7:4) பின் மக்களினம் உருவானது. இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் (இ.ச 8:2) கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர். மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் தங்கியிருந்து (வி.ப 24:18) திருச்சட்டம் பெற்றார். இயேசு அலகையால் சோதிக்கப்படும் முன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத் 4:2). தவக்காலத்தின் நாற்பது நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று இறைவனின் கொடைகளையும், வரங்களையும் பெறும் காலமாகும்.



    கிறிஸ்தவர்கள் சாம்பல் திலகமிட்டு தவக்காலத்தை தொடங்குகின்றனர். சாம்பல் என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மனமாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டுகிறது. தர்மம் செய்து பிறரன்பு செயலில் ஈடுபடுதல், வெளிவேடமற்ற இறை உறவுக்கு வழி வகுக்கும் செபம், பாவத்துக்காக மனம் வருந்தி மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கு முறைகள் ஆகும்.

    மனிதனின் நிலையாமை, துன்பங்கள், பாவங்கள், கடவுளன்பு, மன்னிப்பு, செபம், நோன்பு பற்றி சிந்தித்து மனம்மாறி பாவக்கறைகளான “ பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்“ (கலாத்தியர் 5:19-21) வீண் பெறுமை, ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம். இயேசுவின் வழியில் சமூக அக்கறையோடு புதிய சமுதாயம் படைப்போம்.

    அருட்திரு அ.டேவிட் செபாஸ்டின்,

    பங்குத்தந்தை, குமரன் திருநகர், திண்டுக்கல்.
    கிறிஸ்தவர்களுக்கான 40 நாட்கள் தவக்காலம் தொடங்குவதை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (புதன்கிழமை) சாம்பல் பிரார்த்தனை நடைபெறுகிறது.
    எருசலேம் பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

    அதை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ பக்தர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடிக்கின்றனர். இந்த 40 நாட்களை லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம் என்று குறிப்பிடுகின்றனர். தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமையாகும்.

    இன்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிய வகை உடைகளை உடுத்தி வந்து இந்த ஆராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையினர், கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறு தினத்தன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அதன் சாம்பலை பூசிக்கொண்டு, ஆராதனைகளில் பங்கேற்பார்கள்.



    இந்த 40 நாட்கள் தவக்காலகட்டத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மாமிச உணவுகளை தவிர்க்கின்றனர். சிலர் ஒருவேளை உணவை விட்டுவிடுவார்கள். கிறிஸ்தவர்கள் தங்களின் ஆன்மிக நிலைப்பாட்டை சிந்திக்கச் செய்வதற்காக இந்த தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த காலகட்டத்தில் பல தேவாலயங்களில் மாலை நேர ஆராதனை நடத்தப்படும். ஒவ்வொரு நாளிலும் சிறப்பு போதனைகள் வழங்கப்படும். இந்த 40 நாட்களின் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமையை ‘புனிதவெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.

    பல்வேறு போதனைகளை செய்துவந்த இயேசு அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்ட நிகழ்வையே ‘புனித வெள்ளி’யாக கிறிஸ்தவர்கள் நினைவுகூர்கின்றனர்.

    கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு 3 நாட்கள் கழித்து உயிரோடு எழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. அந்த வகையில் புனித வெள்ளிக் கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை, ஏசு உயிர்த்தெழுந்த நாளாக, அதாவது ‘ஈஸ்டர்’ பண்டிகையாக மகிழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    தவக்காலமான 40 நாட்களில் பக்தர்கள் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகள், ‘ஈஸ்டர்’ தினத்தோடு நிறைவடைகிறது. எனவே, உணவுக் கட்டுபாடுகளை விடுத்துவிட்டு, ‘ஈஸ்டர்’ தினத்தன்று விருந்து உணவை கிறிஸ்தவர்கள் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
    நாளை விபூதி புதன் ஆகும். தவக்காலத்தின் துவக்க நாள். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் சாம்பல் (விபூதி) புதன் மற்றும் தவக்கால நோன்பு நாளை தொடங்குகிறது.
    நாளை விபூதி புதன் ஆகும். தவக்காலத்தின் துவக்க நாள். உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்றைய நாளை கடன் திருநாளாக கருதி ஆலயங்களுக்கு சென்று, கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறன்று இல்லங்களுக்கு எடுத்து செல் லப்பட்ட குருத்தோலைகளை எரித்து விபூதி தயார் செய்யப்படுகிறது.

    இவ்வாறு தயார் செய்யப்பட்ட விபூதி, குருவானவரால் புனிதம் செய்யப்பட்டு “மனி தனே நீ மண்ணாக இருக் கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி ஒவ்வொருவரின் நெற்றிலும் பூசப்படுகிறது.

    விபூதியை அருள் அடையாளமாக வழிபாட்டில் பயன்படுத்தும் வழக்கமானது ஆதி திருச்சபையிலும், தமிழக கலாச்சாரத்திலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்த விபூதியானது மனமாற்றம், மன்னிப்பு, பிறரன்பு எல்லாவற்றுக்கும் மேலாக நோன்பு இதை உணர்த்துவதாகவே உள்ளது.

    “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர் யோவேல் 2:12 என்று பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது.

    விபூதி புதன் அன்று ஆரம்பமாகும் தவக்காலம் துவங்கி ஈஸ்டர் பெரு விழா நாள்வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளவும், கேட்ட வரம் கிடைக்கவும் தவக்காலத்தில் இறை மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்த நோன்பு இருக்கும் முறையானது எல்லா மதங்களிலும் இன்றளவும் கடை பிடிக்கப்பட்டு வருவது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே.

    இஸ்லாம் சகோதரர்கள் ரம்லான் நாளுக்கு முன்ன தாக 40 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். இந்து மத சகோதரர்கள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் 40 நாட்கள் கடும் விரதம் இருக்கிறார்கள்.

    நோன்பு இருக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளதை விவிலிய பின் னணியிலும் சரித்திர பின்னணியிலும் காண முடிகிறது. அதற்கு சில உதாரணங்கள் வருமாறு:-

    கிரேக்கர்கள் தங்களின் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள நோன்பு இருப்பார்களாம். ரஷ்யர்கள் தங் கள் கடவுளின் ஓவியத்தை வரைவதற்கு முன்னர் நோன்பு இருப்பார்களாம். மோயீசன் சீனாய் மலையில் 40 நாட்கள் உண்ணாமல், உறங்காமல் நோன்பு இருந்து தான் 10 கற்பனைகளை பெற்றிருக்கிறார்.

    இறைமகன் இயேசு மண்ணில் இறைபணியை துவங்குவதற்கு முன்னர் 40 நாட்கள் உண்ணாமல், உறங்காமல் நோன்பு இருந்தார் என்பதை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.

    தவக்காலத்தில் செய்ய வேண்டியது என்ன?

    இந்த தவக்காலத்தில் 40 நாட்களும் காவியுடுத்தி நோன்பிருந்து ஆலயத்திற்கு சென்று ஆண்டவரை வழிபடுவதால் மட்டும் ஆண்டவனின் இரக்கத்தை பெற்று விட முடியாது. இந்த தவக் காலமானது பாவம் செய்த மனிதன் தன்னை தானே திருத்திக் கொள்ள வாய்ப்பாக அருளப்பட்டுள்ளது.

    ஆம், இந்த தவக்காலமானது கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய காலம் இது. எவரையும் ஏமாற்றி இருந்தால் இரு மடங்காக திரும்ப கொடுக்க வேண்டிய நேரம் இது. அனாதைகளையும், ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் தேடி சென்று உதவ வேண்டிய தருணம் இது.

    எவரிடமும் பகைமை பாராட்டியிருந்தாலோ உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினரிடம் சண்டையிட்டிருந்தாலோ மன்னித்து அவர்களுடன் சமாதானம் செய்ய வேண்டிய நேரம் இது. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து உண்மை கிறிஸ் தவனாக வாழ வேண்டும் என்பதேயே இந்த தவக்காலம் நமக்கு உணர்த்துகிறது.

    எனவே இந்த தவக்காலத்தில் நோன்பு இருந்தும் ஏழைகளுக்கு உதவி செய்தும், அயலானை அன்பு செய்தும் ஆண்டவனின் அருளை பெறுவோம். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த விபூதி புதன் நம் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தட்டும் என தஞ்சாவூர் கிளமென்ட் அந்தோணிராஜ் தெரிவித்துள்ளார்.
    40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக(விரதம்) அனுஷ்டிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் நாளை 1-ந் தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவது போல இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின வாரம் பெரிய வாரமாக அனுஷ்டிக்கப்படும். அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறப்பார். அதன்பின்பு 3 நாட்கள் கழித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுவார். இதுவே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

    பெரிய வாரத்திற்கு முந்தின 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுஷ்டிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் நாளை 1-ந் தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

    இதனை சாம்பல் புதன் என அழைப்பார்கள். இந்த நாளில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு செல்வோர் அனைவரது நெற்றியிலும் சாம்பலால் சிலுவை குறியிடப்படும். மண்ணில் பிறந்தவர் மண்ணுக்கே திரும்புவர் என்பதை நினைவு படுத்தவே இந்நிகழ்ச்சி நடைபெறும்.



    இதை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள்.

    ஏழை, எளியோருக்கு உணவு அளித்து தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். மேலும் அவர்களின் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. நாளை முதல் தவக்காலத்தின் 40 நாட்களும் அனைத்து ஆலயங்களிலும் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறும்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து ஆலயங்களிலும் சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மேலும் இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதும் உண்டு. பல்வேறு ஆலயங்களில் இருந்து அவர்கள் திருப்பயணமாக வெளியூர்களில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு செல்வார்கள்.

    தஞ்சை மகர்நோம்புச்சாவடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது.
    தஞ்சை மகர்நோம்புச்சாவடி யில் உள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியை பங்குத்தந்தைகள் அந்தோணி டேனியல், மரியலூயிஸ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முன்னதாக வாணவேடிக்கைகள் நடைபெற்றன.

    கடந்த 13-ந் தேதி அன்று பொங்கல் திருப்பலியுடன் விழா தொடங்கியது. அதன்பின்னர் புனித செபஸ்தியாரின் திருசொரூபம் படி இறக்குதல், பிரார்த்தனைகள், திருக்கொடி பவனி, கொடியேற்றம், உருவ பட பவனி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) விழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது.
    நற்செய்தி நூல்கள் விவரிப்பது போலவே, உண்மையாகவே இயேசுவின் சோதனை நிகழ்ந்ததா என்னும் கேள்வியே இந்த விவாதத்தின் மையத்தில் உள்ளது.
    இயேசுவின் சோதனை பற்றிய பாடம் எந்த இலக்கியப் பாணியில் அமைக்கப்பட்டது என்பது குறித்து ஒரு விவாதம் உள்ளது. அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்று நற்செய்தி நூல்கள் கூறுவது வரலாற்று நிகழ்ச்சியா, உவமையா, தொன்மமா அல்லது பல இலக்கியப் பாணிகளின் தொகுப்பா? நற்செய்தி நூல்கள் விவரிப்பது போலவே, உண்மையாகவே இயேசுவின் சோதனை நிகழ்ந்ததா என்னும் கேள்வியே இந்த விவாதத்தின் மையத்தில் உள்ளது.

    எடுத்துக்காட்டாக, 19ஆம் நூற்றாண்டு ஆய்வாளரான ஆண்ட்ரூ மார்ட்டின் ஃபெய்ர்பெய்ர்ன் என்பவர் இப்பொருளை ஏற்கனவே ஆய்ந்தார். இயேசு சோதனைகளைச் சந்தித்தபோது அலகை நேரடியாக அவருடைய முன்னிலையில் வந்து நின்று பேசியதா? அவரை உயரமான ஒரு மலைக்குக் கூட்டிச் சென்றதா? இயேசுவுக்கு அலகைக்கும் இடையே நிகழ்ந்ததாக நற்செய்தி நூல்கள் கூறுகின்ற உரையாடல் உண்மையாகவே நடந்ததா? அலகை விவிலியத்தை மேற்கோள் காட்டி இயேசுவுக்குச் சவால் விடுத்ததா? அல்லது, இந்நிகழ்ச்சியின் வழியாக, எல்லா மனிதரும் சந்திக்கின்ற சோதனைகள் கதையாக எடுத்துக் கூறப்பட்டனவா? இத்தகைய கேள்விகளை ஃபெய்ர்பெர்ன் ஆய்வு செய்தார்.

    இயேசு தம்முடைய பணிக்காலத்தின்போது உவமைகள் வழியாக மக்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அப்போது தமது உள்ளத்தின் ஆழத்தில் தாம் சந்தித்த சோதனைகளை, உள் அனுபவங்களை அவர் மக்களோடு பகிர்ந்துகொள்வதற்காக, தாம் சோதனைகள் மீது வெற்றிகொண்டதை ஓர் உவமையாக, கதையாக எடுத்துக் கூறியிருக்கலாம். இவ்வாறு வில்லியம் ஈவன்ஸ் போன்றோர் கருதுகின்றனர்.

    மேலும், இயேசு கூறிய உவமைகளுள் லூக்கா 14:28-30 பகுதியில் இரண்டு உவமைகள் இணைந்து வருகின்றன. ஒரு மனிதன் ஒரு கோபுரம் கட்ட விரும்புகின்றான். அதை அரைகுறையாகக் கட்டிவிட்டு அவன் முடிக்க இயலாமல் விட்டுவிட்டால் எல்லாரும் அவனைப் பார்த்து நகைப்பார்கள். அதுபோலவே, ஓர் அரசன் தகுந்த தயாரிப்பின்றி மற்றோர் அரசனை எதிர்த்துச் சென்று, தோல்வியுற்றால் அதுவும் நகைப்புக்குரியதே.



    இந்த உவமைகள் வழியாக இயேசு “செய்வன திருந்தச் செய்” என்னும் பாடத்தையும், ஆர அமர சிந்திக்காமல் அவசரப்படாலாகாது எனவும் அறிவுறுத்துகிறார். இயேசுவுக்கு நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்ற சோதனைகளும் இந்தப் பாடத்தைப் புகட்ட இயேசுவால் கூறப்பட்ட உவமைகளா என்று ஹென்றி காட்பரி போன்ற அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் மெசியாப் பணியானது கடவுளின் திட்டப்படி நிகழுமே ஒழிய இயேசுவின் சுய விருப்பத்துக்கு ஏற்ப நிகழாது என்பதையும் இயேசு “சோதனை என்னும் உவமை” வழியாக உணர்த்தியதாகக் கருதலாம்.

    வில்லியம் பார்க்லே என்னும் விவிலிய அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்: “இயேசு சந்தித்த சோதனைகளுள் ஒன்று, அலகை இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலை உச்சிக்குக் கொண்டு சென்றதாகவும், உலக அரசுகள் அனைத்தையும் அவருக்குக் காட்டி, அவற்றை அவருக்குக் கொடுப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் அனைத்தையும் பார்க்கக் கூடிய அளவில் உயர்ந்த மலை பாலத்தீன நாட்டில் கிடையாது. எனவே, இச்சோதனை நற்செய்தி நூல்கள் கூறுவதுபோல அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று சொல்ல முடியாது. இயேசுவின் உள்ளத்து அளவிலும் உணர்வு அளவிலும் என்ன அனுபவங்களை அவர் பெற்றார் என்பதே இயேசுவின் சோதனைகள் வழியாகக் கூறப்படுகின்றது”. சோதனையில் வருகின்ற அலகை பற்றிய விவரங்களையும் எழுத்துக்கு எழுத்து உண்மையாகக் கொள்ள முடியாது.

    இவ்வாறு, இயேசு சந்தித்த சோதனைகள் ஒன்றில் அவருடைய உள் அனுபவத்தை வெளிக்கொணர்கின்றன அல்லது உவமையாக, கதையாக இயேசுவால் எடுத்துக் கூறப்படுகின்ற ஓர் உண்மையை உள்ளடக்கி இருக்கின்றன என்றும், எழுத்துக்கு எழுத்து அப்படியே நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்ட் காற்றாடிமலையில் தூய வியாகுல அன்னை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கு தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு ஆலய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் காலை 6 மணிக்கு திருப்பலி, சிலுவைபாதை, இரவு 7 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து 4-ந் தேதி முதல் 9-ம் தேதி வரையுள்ள திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

    மார்ச் 10-ந் தேதி காலை 6.45 மணிக்கு சிலுவை பாதை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.45 மணிக்கு நற்கருணை பவனி போன்றவை நடைபெறும். திருவிழாவின் 9-வது நாளான 11-ந் தேதி காலை 6 மணிக்கு தேவசகாயம் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடக்கிறது. ஆராதனையில் தேவசகாயம்மவுண்ட் மறைவட்ட முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டனி, முதன்மை அருட்பணியாளர் சாலமோன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கையும், 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 5 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும். இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும், 8.30 மணிக்கு விருந்தினர் திருப்பலியும், 10.30 மணிக்கு நேர்ச்சை திருப்பலியும் நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 10 மணிக்கு மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், உதவி பங்குதந்தை ரவிகாட்சன் கென்னடி, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” (பிலி.4:7)
    “இதோ நான் அவர்களுக்குச் சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்கி அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்” (எரே.33:6).

    இயேசு கிறிஸ்து சமாதானப் பிரபுவாக இருப்பதால் சமாதானத்தின் பூரணராகிய இயேசுவிடத்திலிருந்து மனுஷருக்குச் சமாதானம் உண்டாகிறது. அவருடைய காயங்களிலிருந்து வழிந்த ரத்தம் நமக்கு சமாதானத்தை உண்டாக்குகிறது. பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சமாதானத்தை அனுபவிக்கும் வாசலை இயேசுவின் திருக்காயங்கள் திறந்து வைத்துள்ளன. அவர் சிலுவையில் சிந்திய விலைமதிப்பில்லாத ரத்தம் நம்மை சமாதானத்திலும், ஆரோக்கியத்திலும் நிலைக்க செய்து தீயவரின் பிடியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது.

    “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு” (சங்.119:165)

    கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்த மாக்குகிறது. வசனத்தால் உண்டாகும் ஆறுதலும், மனமாறுதலும் நம்முள் ஒளிந்திருக்கும் நல்ல எண்ணங்களை தட்டி எழுப்புகின்றன. கர்த்தருடைய வசனத்தைத் தியானித்து அதன்படி ஜீவித்தால் தேவன் நமக்கு நதியைப் போன்ற சமாதானத்தை தருவார்.

    தேவனுடைய ராஜ்ஜியம் நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமாக இருக்கிறது. அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். என்ன அற்புதமான சமாதானம் என்று பாருங்கள்.

    “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” (பிலி.4:7)

    தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. சமாதானத்தை இழந்து போகின்றோம். மறைவாக இருதயத்துக்குள் இருந்து எழும்பும் வீண் சிந்தனைகள் தேவன் அருளும் சமாதானத்தை குலைக்கக்கூடியவை. வீண் சிந்தனைகளினால் உண்டாகும் தீமை எவ்வளவு கொடியது.



    “வீண் சிந்தனைகளை வெறுத்து, வேதத்தில் பிரியப்படுகிறேன்” என்று தாவீது கூறுகின்றான்.

    நம்முடைய சமாதானத்தைக் குலைக்கக்கூடிய சிந்தனைகளை விட்டு விலகி, சமாதானத்தைக் கெடுக்கும் காரியங்களை வெறுக்க வேண்டும். தேவ சமாதானம் உடையவர்களாய் வாழ வேண்டும். தேவ சமாதானமே எல்லாப் புத்திக்கும் மேலானது.

    “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்” (கொலோ.3:5)

    சண்டை, பொறாமை, வைராக்கியம், பகை உணர்வு, விரோதம், கோபம், அசுத்தம், கொலை, வெறி... போன்றவை மனிதனை அசுத்தமாக்கி... தேவனிடமிருந்து விலக்கி வைக்கிறது. மேலும் தேவன் அருளிய சமாதானத்தையும் குலைத்து விடுகிறது.

    பயங்கரமான சிங்கங்களின் குகையில் தானியேலை தள்ளிவிட்டபோதும், உன்னத தேவனின் அருளால் வெளியே வந்தார். மனதில் இருந்த பயத்தை ஸ்தோத்திரங்களாலும், புகழ் பாக்களாலும் மறக்கடித்து இறைவனை துதித்து தப்பித்தார். அன்னாள், தனக்குப்பிள்ளை இல்லாதிருந்தப்போதும், மனம் கலங்கியவளாய் ஆலயத்தில் சென்று உன்னத தேவனை தேடினாள்.

    அன்னாளின் விண்ணப்பம் இறைவனால் ஏற்கப்பட்டு... ஆண் குழந்தை பிறக்கவே... சந்தோஷமாய் வீடு திரும்பினாள்.

    “நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோம.15:13)

    கடல் அலைகளை போல அலை அலையாய் துன்பங்கள் வந்தாலும், இறைவன் கொடுத்த சமாதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் துன்பம் என்ற அலை இறை நம்பிக்கை என்ற கற்பாறையில் மோதும்போது சிதறிப்போகின்றன. எத்தகைய அலை அடித்தாலும் பாறை அசைவதில்லை. பிரச்சினைகளை உடைத்தெறிந்துக்கொண்டே இருக்கிறது.

    யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு அறிந்திருந்தபோதும் ‘சிநேகிதனே’ என்று அழைத்து சமாதானம் செய்தார். பேதுரு இயேசுவை மறுதலித்து சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். இயேசு அவனை சத்துருவாக எண்ணாது அன்புடன் பார்த்தார். இத்தகைய செயல்பாடுகள் தான் அவர்களை யோசிக்க வைத்தது.

    ‘உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’.

    பூரண சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட பவுல் இதுமுதல் ‘நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ என்றார். தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி ஆசீர்வதிக்கின்றார். நீ பரலோக தேவனை தேடும்போது சமாதானம் உன் வாழ்க்கையில் உண்டாகும். கர்த்தருடைய வருகையில் பூரண சமாதானத்தோடே அவரை சந்திப்போம். ஆமென்.

    அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.
    நல்ல சமாரியன் கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு உவமையாகும். இயேசு கூறிய உவமையாக அறியப்படும் இந்த உவமை நான்கு நற்செய்திகளில் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மட்டுமே காணப்படுகிறது. கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.

    இயேசு இவ்வுவமையை கூறுவதற்கான பின்னணி இவ்வாறு கூறப்பட்டுள்ளது :

    இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

    அதற்கு இயேசு, சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது" என்றார்.

    இயேசு, சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் நீவிர் வாழ்வீர் என்றார்.
    அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.

    அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.



    உவமை :

    ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். தற்செயலாய் அவ்வழியே வந்த சமயகுரு ஒருவர் குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

    ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். விழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

    கருத்து :

    பரிவு, அன்பு என்பனவேயன்றி ஒருவனது சட்ட அறிவோ பதவியோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரைத் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. இன்று பண்பாடுகளுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் பலவாறாக உருவகப்படுத்தப்படுகின்றது.
    இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார்.
    இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.

    ஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு "கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.

    இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார்.

    எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ:

    "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்." (எசாயா 61:1-3)

    எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்." அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.

    "செய்தி" என்னும் சொல்லுக்கு "நடந்த நிகழ்ச்சி" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி "செய்தியாக" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே "நற்செய்தி" ஆயிற்று.

    புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை மெசியா, மானிட மகன், ஆண்டவர், இறைவாக்கினர், இறைமகன் என்னும் பல பெயர்களால் அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது மானிட மகன் என்னும் பெயரையே கையாளுகின்றார்.
    ×