search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சாம்சனை டோனியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ
    X

    சாம்சனை டோனியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ

    • கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா -ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

    முன்னதாக இந்த போட்டியில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதமடித்தது போலவே சதத்தையும் நெருங்கினார். அந்த நிலைமையில் சூயஸ் சர்மா வீசிய 12.3 -வது பந்தில் பவுண்டரி அடித்த அவர் 4-வது பந்தில் ரன்கள் எடுக்காத நிலையில் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 94* ரன்களை எட்டினார். அந்த நிலைமையில் கடைசி பந்தை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் தாம் 48* ரன்களில் இருந்த போது அரை சதமடிக்கலாம் என்ற சுயநலமின்றி அப்படியே தடுத்து நிறுத்தி அடுத்த பந்தில் சிக்சர் அடித்து சதமடிக்குமாறு ஜெயிஸ்வாலுக்கு கையை உயர்த்தி மகிழ்ச்சியுடன் சிக்னல் கொடுத்தார்.

    குறிப்பாக 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றியை உறுதி செய்த விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது புதிதாக களமிறங்கிய கேப்டன் டோனி ஒரு ஓவரின் கடைசி பந்தில் அடிப்பதற்கேற்றார் போல் பந்து நன்றாக வந்தும் அப்படியே தடுத்து நிறுத்தி விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல இந்த போட்டியில் பெருந்தன்மையுடன் சுயநலமின்றி கேப்டனுக்கு அடையாளமாக சஞ்சு சாம்சன் செயல்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து பாராட்ட வைத்தது.

    ஆனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க கூடாது என்பதற்காக அதே கடைசி பந்தை வேண்டுமென்றே சூயஸ் சர்மா ஒய்ட் போல லெக் சைட் வீச முயற்சித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் சுதாரித்த சஞ்சு சாம்சன் இடது புறமாக நகர்ந்து சென்று அடிக்காமல் ஒய்ட் பந்தாக மாறாமல் தடுத்து நிறுத்தினார். அதற்கடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மட்டுமே அடித்து 98* ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்டது வேறு கதை. ஆனால் ஒய்ட் போட்டு அதில் 1 ரன் எக்ஸ்ட்ரா வழங்கி மீண்டும் பந்து வீசினால் சஞ்சு சாம்சன் வெற்றி பெறும் ரன்களை எடுப்பார். அதனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அத்துடன் ஏற்கனவே ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இதே போல் கடைசி பந்தில் சதமடிக்கும் வாய்ப்பை பெற்ற சேவாக் சிக்சர் அடித்து 100 ரன்களை தொட்ட போதிலும் சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே நோபால் வீசி அதை தடுத்த கேவலமான திட்டத்தை யாராலும் மறக்க முடியாது.

    கிட்டத்தட்ட இந்த போட்டியில் தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பைப் பறித்த ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கொல்கத்தா மற்றும் சூயஸ் சர்மா அவ்வாறு செயல்பட்டதால் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    Next Story
    ×