search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கொரோனா பாதிப்பு: 2-வது டெஸ்ட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடும் கிரீன்- வைரலாகும் வீடியோ
    X

    கொரோனா பாதிப்பு: 2-வது டெஸ்ட்டில் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடும் கிரீன்- வைரலாகும் வீடியோ

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேமரூன் கிரீன் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
    • கேமரூன் கிரீன் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுகிறார். வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது பவுலர் மற்றும் கேட்ச் பிடித்த பீல்டருக்கு கைதட்டி வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம்.

    அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது அவர் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார். ஹசில்வுட் விக்கெட் எடுத்த போது அவரிடம் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவிக்க வந்த கிரீன் உடனே சுதாரித்து கொண்டு சைகை முழுமாக கைதட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×