search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி டிராபி அரையிறுதி: முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு சுருண்டது தமிழ்நாடு
    X

    ரஞ்சி டிராபி அரையிறுதி: முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு சுருண்டது தமிழ்நாடு

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    மும்பை:

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். என்.ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 48 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதானமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×