search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பையை வெல்லும் வரை... ஓய்வு குறித்த கேள்விக்கு ரோகித்-ன் நறுக் பதில்...
    X

    உலகக் கோப்பையை வெல்லும் வரை... ஓய்வு குறித்த கேள்விக்கு ரோகித்-ன் நறுக் பதில்...

    • டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் அடுத்தடுத்தாண்டுகளில் நடைபெறுகின்றன.
    • இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.

    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மோதியது. இரண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    வருகிற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்த அணியையும் இவர்தான் வழி நடத்துகிறார்.

    இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, குறிப்பாக ஒயிட்பால் (டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால், நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் உடன் கவுரவ் கபூர் நடத்தும் "பிரேக்பாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது எட் ஷீரன் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.

    எட் ஷீரன் ஓய்வு எப்போது எனக் கேட்ட கேள்விக்கு,

    ரோகித் சர்மா: "இந்த நேரத்திலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆகவே, இன்னும் சில வருடங்கள் விளையாடும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.

    எட் ஷீரன்: இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வரைக்கும்?

    ரோகித் சர்மா: "ஆமாம். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். 2025-ல் இங்கிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விகள் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது." என்றார்.

    Next Story
    ×