search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர்- ரோகித் சர்மா பேட்டி
    X

    ரோகித் சர்மா, உமேஷ் யாதவ்

    உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர்- ரோகித் சர்மா பேட்டி

    • உமேஷ், ஷமி போன்ற வீரர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
    • இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அணிக்கு அழைக்கப்படுவார்கள்

    மொகாலி:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இது குறித்து மொகாலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர், தனது திறன் குறித்து பல முறை நிரூபித்தவர், இந்த தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறினார். உமேஷ், ஷமி போன்ற சக தோழர்கள் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர் என்றும் ரோகித் கூறினார்.

    இதேபோல் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகித், விராட் கோலி தான் எங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×