search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இன்று சதம் காணும் ரிஷப் பண்ட்
    X

    இன்று சதம் காணும் ரிஷப் பண்ட்

    • 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார்.
    • 2018 சீசனில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது.

    இதில் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும், டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

    ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.40 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147.90 ஆகும். 99 இன்னிங்சில் 15 அரைசதம், ஒரு சதம் விளாசியுள்ளார். ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் அடித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக 2,433 ரன்கள் அடித்துள்ளார். சேவாக் 2,382 ரன்கள் அடித்துள்ளார்.

    2016-ல் 10 போட்டிகளில் 198 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 2017-ல் 14 போட்டிகளில் 366 ரன்கள் அடித்துள்ளார். 2018 சீசன் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் 14 போட்டிகளில் 684 ரன்கள் குவித்தார். சராசரி 52.62 ஆகும். ஸ்டிரைக் ரேட் 173.6 ஆகும்.

    Next Story
    ×