search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிங்கிள் வேண்டாம் என்று கிங்கிடம் நான் தான் கூறினேன்.. கேஎல் ராகுல்
    X

    சிங்கிள் வேண்டாம் என்று கிங்கிடம் நான் தான் கூறினேன்.. கேஎல் ராகுல்

    • சொந்த சாதனைக்காக கோலி விளையாடவில்லை என லோகேஷ் ராகுல் கூறினார்.
    • பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

    வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது ஒருநாள் போட்டியில் அவரது 48-வது சதமாகும்.

    நேற்றைய போட்டியில் கோலி-லோகேஷ் ராகுல் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. கோலி 85 ரன்களில் இருந்தபோது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் ஒரு சிங்கிள் கூட எடுக்காமல் கோலி சதம் அடிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தினார்.

    இதற்கிடையே கோலி, சதம் அடிப்பதற்காக விளையாடினார் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

    இதுதொடர்பாக லோகேஷ் ராகுல் கூறும் போது, விராட்கோலி சதமடிப்பதற்காக நான் சிங்கிள் எடுப்பதை தவிர்த்தேன். அப்போது கோலி என்னிடம், நீங்கள் சிங்கிள் எடுக்காமல் போனால் அது நன்றாக இருக்காது. ஏனென் றால் நான் சொந்த சாத னைக்காக விளையாடுகி றேன் என அனைவரும் நினைப்பார்கள் என்று கூறினார். சிங்கிள் எடுக்கும் படி கூறினார். ஆனால் வெற்றி நமக்கு உறுதியாகி விட்டதால் நீங்கள் சதமடியுங்கள் என்று நான்தான் அவரிடம் கூறினேன். 30 ரன்கள் தேவைப்பட்டபோது அனைத்து பந்துகளையும் நான் தடுத்து ஆடுகிறேன். பெரிய ஷாட்டுகளை விளையாடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    41-வது ஓவர் முடிவில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கோலி 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். 42-வது ஓவரை வீசிய நசூம் முதல் பந்தை லைக் சைடில் வைடாக வீசினார். ஆனால் அந்த பந்துக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டல் போரக் வைடு கொடுக்கவில்லை.

    2-வது பந்தில் கோலி ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×