என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி.. விராட் கோலி உருக்கம்
- இந்த ஐபிஎல் சீசன் சிறப்பாக அமைந்தது.
- அணியினர் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி.
பெங்களூரு:
16-வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் ஆட உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6-வது இடத்தை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐபிஎல் அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விராட்கோலி கேப்டனாக இருந்த காலத்தில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இந்நிலையில், பெங்களூரு அணியை அனைத்து நிலைகளிலும் ஆதரித்த விசுவாசமான ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்த ஐபிஎல் சீசன் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் எதிர்பாராத வகையில் நாங்கள் ஒரு சில இடங்களில் சரியாக விளையாடவில்லை. வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நாம் நம்முடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அணியினர் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி. நாங்கள் வலுவாக திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






