என் மலர்

  கிரிக்கெட்

  ரோகித் சர்மா சொன்னது பலித்தது.. மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல உதவிய ஆர்சிபி
  X

  ரோகித் சர்மா சொன்னது பலித்தது.. மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல உதவிய ஆர்சிபி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம்.
  • பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுக்கான போட்டிகள் முடிவுக்கு வந்தது. நாளை முதல் பிளே ஆப் சுற்று தொடங்கவுள்ளது.

  இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ரோகித் சர்மா பிளேஆப் சுற்று தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது-

  உங்களால் எதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமோ அதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மற்றபடி, நமக்கு சிறந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம். சென்றால் அதற்கு எங்கள் அணி வீரர்களே முக்கிய காரணம்.

  கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம். அதற்கான பலன் இப்போது கிடைக்கும் என்று நம்புகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×