search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

    • சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.
    • கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, ஷிவம் துவே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார்.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், ரகானே 21 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்குகிறது.

    Next Story
    ×