search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆட்ட நாயகன் விராட் கோலி அல்ல.. மீண்டும் வன்மத்தை கக்கிய கம்பீர்
    X

    ஆட்ட நாயகன் விராட் கோலி அல்ல.. மீண்டும் வன்மத்தை கக்கிய கம்பீர்

    • பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மழைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை விட குல்தீப் யாதவ் தான் ஆட்டநாயகன் என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ் ஆட்டநாயகன். மேலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது.

    அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    என்று கம்பீர் கூறினார்.

    Next Story
    ×