search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்- ரெய்னா கணிப்பு
    X

    சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்- ரெய்னா கணிப்பு

    • டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
    • டோனி இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன் என ரெய்னா கூறினார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க இருக்கிறது. 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கேப்டனாக திகழும் டோனி 6-வது முறையாக கோப்பை வெல்ல சிஎஸ்கே அணியை வழி நடத்த உள்ளார்.

    கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி விளையாடிய டோனிக்கு தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

    இந்நிலையில் டோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெக்வாட் செயல்படுவதற்கு தகுதியானவர் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அடுத்த கேப்டன் யார் என்பதே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய கேள்வியாகும். ஒருவேளை டோனி கேப்டனாக விலகினாலும் கூட அவர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் போன்ற ஏதோ ஒரு வேலையில் இருப்பார். ஆனால் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்வியாகும். அது போன்ற சூழ்நிலையில் ருதுராஜ் நல்ல தேர்வாக இருப்பார்.

    எனவே எம்எஸ் டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் இம்முறை டோனி தன்னுடைய துணை கேப்டனை கைகாட்டி அவரிடம் நான் இந்த அணியை 2008 முதல் கையாண்டு வருகிறேன். இனிமேல் நீங்கள் இந்த மஞ்சள் படையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து பெவிலியனில் உட்காருகிறேன் என்று சொல்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது 42 வயதாகும் டோனி தன்னுடைய வருங்காலத்தை எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்ப்பது முக்கியம். அவர் இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.

    Next Story
    ×