search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா உள்பட 2 சிஎஸ்கே வீரர்கள்
    X

    டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா உள்பட 2 சிஎஸ்கே வீரர்கள்

    • எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பாண்ட்யா பதிவிட்டுள்ளார்.
    • நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது என ரெய்னா தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இவரை தொடர்ந்து சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2009-ம் ஆண்டு முதல் இன்றுவரை மற்றும் என்றென்றும் இவரிடம் எனது பயணம். மஹி பாய் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மஞ்சள் நிறத்தில் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் சென்னை அணியின் முன்னாள் வீரரும், டோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய அண்ணா டோனி. பிட்ச்சை பகிர்வது தொடங்கி, கனவுகளை பகிர்வது வரை நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது. உங்கள் பல, மற்றும் ஒரு நண்பராகவும், தலைவனாகவும் நீங்கள் கொடுத்த பலம் தான் என்னுடைய கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது.

    மகிழ்ச்சி, வெற்றி, நல்ல உடல்நலம் கொண்டதாக இந்த ஆண்டும் உங்களுக்கு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். தொடர்ந்து வழிநடத்துக்கள், உங்களது மேஜிக்கை பரப்பிக்கொண்டே இருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×