search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை 2023 - இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நேபாளம்
    X

    ஆசிய கோப்பை 2023 - இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நேபாளம்

    • நேபாளம் அணிக்கு துவக்க வீரரான ஆசிப் ஷேக் 58 ரன்களை குவித்தார்.
    • இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×