என் மலர்
முன்னோட்டம்
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின் முன்னோட்டம்.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
படத்தை பற்றி அருண் விஜய் கூறியதாவது: “என் கலையுலக பயணத்தில் நான் நம்புகிற ஒரு சில இயக்குனர்களில் அறிவழகனும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர் டைரக்டர்தான். அந்த வகையில் எனக்கு பக்கபலமாகவும், புரிதலுமாகவும் அறிவழகன் இருக்கிறார்.

இந்த படத்துக்கு ‘பார்டர்’ என்ற தலைப்பு மிக பொருத்தமாக அமைந்து இருப்பதை வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன். ‘பார்டர்’ படம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அருண் விஜய் தெரிவித்தார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் விஜித் பச்சான், மிலனா நாகராஜ், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் முன்னோட்டம்.
கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தங்கர் பச்சான். இசை - தரண்குமார். ஒளிப்பதிவு - பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை - சக்தி செல்வராஜ், நடனம் - தினேஷ், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா.
மு.களஞ்சியம் இயக்கத்தில் புகழ், சுபபிரியா, சீமான் நடிப்பில் உருவாகி உள்ள முந்திரிக்காடு படத்தின் முன்னோட்டம்.
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளாகள்.
ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை எல்.வி.கே.தாஸ் கவனிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கி உள்ளார் மு.களஞ்சியம்.

படம் பற்றி அவர் கூறியதாவது: “முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்திருப்பதாக” அவர் தெரிவித்தார்.
சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொற்றவை’ படத்தின் முன்னோட்டம்.
சி.வி.குமார் எழுதி இயக்கும் படம் ‘கொற்றவை’. மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. கதையின் நாயகனாக ராஜேஷ் கனகசபை, கதைநாயகியாக சந்தனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
இயக்குனர்கள் வேலுபிரபாகரன், கவுரவ் நாராயணன் மற்றும் அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: “கொற்றவை, உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம். இவ்வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமானவை. வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்” என கூறினார்.
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.
இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் " படத்தின் முன்னோட்டம்.
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் " யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.
இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு - இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - எலிசா, கலை - பழனி, ஸ்டில்ஸ் - சக்தி பிரியன்.
கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் மாவீரன் பிள்ளை படத்தின் முன்னோட்டம்.
கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.
இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் முன்னோட்டம்.
நந்தா பெரியசாமி எழுதி இயக்கி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிவாத்மிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் சேரன், விக்னேஷ், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சினேகன், நமோ நாராயணன், சவுந்தரராஜன், மவுனிகா, சுஜாதா, பிரியங்கா என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்று நடித்து வருகிறது.

பி.ரங்க நாதன் தயாரிக்கும் இப்படம் நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி வருகிறது. பெர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். ஆர்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். தினேஷ் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி வரும் மூணு முப்பத்தி மூணு படத்தின் முன்னோட்டம்.
பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம்.

படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
ஆர் கோபால் இயக்கத்தில் சரோன், பிரியா, யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அடங்காமை’ படத்தின் முன்னோட்டம்.
வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் படம் ‘அடங்காமை’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் ஏற்கனவே மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.
இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த பிரபல மாடல் அழகி, பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஆர்.கோபால் கூறியதாவது: “சிறுவயதில் இருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும், இன்னொருவன் நடிகனாகவும், மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.
டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அதுமட்டுமல்ல, காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய், நண்பர்களின் உதவியை நாடுகிறான் டாக்டர். கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்ன? இதற்கும் மற்ற நண்பர்கள் இருவருக்கும், தொடர்பு உள்ளதா? என்பதற்கு பதில் சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.
கெவின் இயக்கத்தில் அபி சரவணன், மஹானா, ஜான் விஜய், மதுமிதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கும்பாரி’ படத்தின் முன்னோட்டம்.
ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்கி உள்ளார்.
நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய பிரகாஷ் மற்றும் ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள். ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது: “இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகின் ராவ், அஞ்சனா கீர்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘வெற்றி’ படத்தின் முன்னோட்டம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார்.

மேலும் அனுபமா குமார், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கி வருகின்றனர்.






