என் மலர்
முன்னோட்டம்
மனுஷா தயாரிப்பில் ரஹ்மான் ஜிப்ரீல் ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம்.
75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க, ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.
தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வளர்த்து நடித்து உள்ளார்.

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ‘ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல்.
ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்.
ஹாசிம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் முன்னோட்டம்.
கேரளாவில் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ள படம் 'உன் காதல் இருந்தால்' . தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்க, மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படத்தின் முன்னோட்டம்.
‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.


மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள N 4 படத்தின் முன்னோட்டம்.
“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார். தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பாளர்கள் - நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார்
தயாரிப்பு நிறுவனம் - தர்மராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ்
எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் - ரபேல் ராஜசேகர்
ஒளிப்பதிவு - திவ்யன்க் S
படத்தொகுப்பு - டேனி சார்லஸ்
இசை - பாலசுப்ரமணியன் G
சண்டைப்பயிற்சி - V.கோட்டி
உடைகள் - நந்தா அம்ரிதா, லோகேஷ்
அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

முற்றிலும் கிராமிய பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமயந்தி இயக்கத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காயல்’ படத்தின் முன்னோட்டம்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம். ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே முன்னோட்டம்.
`இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கும் அடுத்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எண்ணித்துணிக’ படத்தின் முன்னோட்டம்.
ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எண்ணித்துணிக’. இது ஒரு திகில் படம். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கேப்மாரி படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் கூறியதாவது: “எண்ணி துணிக படத்தின் வில்லன் கதாபாத்திரம், சர்வதேச கடத்தல்காரன். இந்த வில்லன் வேடத்துக்காக பல நடிகர்களை தேர்வு செய்து பார்த்தோம். மிக ஸ்டைலாகவும், கலக்கலானதாகவும் அந்த கதாபாத்திரம் இருப்பதால் யாரும் பொருந்தவில்லை. வம்சி கிருஷ்ணா கச்சிதமாக பொருந்தினார்.

படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருப்பதால், வில்லன் கதாபாத்திரத்துக்கான உடைகளை அங்கேயே வாங்கி அனுப்பி வைத்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ‘சீதக்காதி’ பட புகழ் சுனில்ரெட்டி அரசியல்வாதியாக வருகிறார்”. என கூறினார்.
1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள 83 படத்தின் முன்னோட்டம்.
விளையாட்டுப் போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்கள், எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி சிறப்பாக ஆடி, இறுதி சுற்று வரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணி வீரர்களே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உண்மை சம்பவங்களுடன் சில சுவாரசியமான சம்பவங்களையும் சேர்த்து, 83 படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

ரன்வீர் சிங், தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன், இந்தூரி, ஜீவா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கபீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தையும் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி உள்ளது.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை.

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம். பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும்.” இவ்வாறு அவர் கூறினார்.
அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‘எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார்.
அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






