என் மலர்
முன்னோட்டம்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் முன்னோட்டம்.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்" என்று இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் மனுகுமரன் கூறியதாவது: "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார்.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம்.

நிகிலா விமல், சிபிராஜ்
அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார்.
எஸ்.எம்.குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கும் அம்மா உணவகம் படத்தின் முன்னோட்டம்.
அம்மா உணவகத்தின் பெருமையையும் அது சார்ந்த தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து 'அம்மா உணவகம்' என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது. 'அன்னமிட்ட தாய்க்கு சமர்ப்பணம்' என்ற மேற்கோளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் விவேகம் .கே.சுரேஷ். இப்படத்தில் நாயகர்களாக அஸ்வின் கார்த்திக், இந்திரன், சசி சரத், நாயகியாக ஶ்ரீநிதி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாஞ்சில் சுவாமி, தமிழ்ச்செல்வன் இவர்களுடன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒரு வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களுடனும் அம்மா உணவகத்தின் பெருமையையும் கூறும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.

அம்மா உணவகம் படக்குழுவினர்
ஒளிப்பதிவு -மோகன ராமன், இசை -எஸ் .ஷாந்தகுமார், படத்தொகுப்பு -உதயா கார்த்திக், வசனம் -நியூட்டன் , பாடல்கள் கிருதியா, தொல்காப்பியன், ஜான் தன்ராஜ், சண்டைப்பயிற்சி- ஸ்டண்ட் சரண், நடனம் சாய் சரவணா.
படத்தை எஸ்.எம்.குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு அப்துல் அஜீஸ். தமிழகமெங்கும் ஆக்ஷன் - ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
ஷரவணன் சுப்பையா இயக்கத்தில் அனேகா, கதிரவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மீண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர், ஷரவணன் சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார், ஷரவணன் சுப்பையா. கதாநாயகியாக நட்பே துணை பட நடிகை அனேகா நடித்துள்ளார். இதில் இயக்குனர் ஷரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஓரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.

அனேகா, கதிரவன்
படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் அக்னிச் சிறகுகள் படத்தின் முன்னோட்டம்.
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்திலும், அக்ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காக்கி’ படத்தின் முன்னோட்டம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காக்கி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். சாந்தனு நடித்த ‘வாய்மை’ படத்தை இயக்கிய ஏ.செந்தில்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.
காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் ரவிமரியா, ஜான் விஜய், ஈஸ்வரிராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, அவ்கத் இசையமைத்துள்ளார்.
வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயாரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் முன்னோட்டம்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியதாவது: “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

ஸ்ரேயாரெட்டி
நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார்” என்றார்.
ராஜேஷ் வீரமணி இயக்கத்தில் பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் லாகின் படத்தின் முன்னோட்டம்.
ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.
சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ப்ரீத்தி
இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்காரி தி பாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி கேரளாவில் வெற்றி பெற்ற மலையாள படம், ‘மை பாஸ்.’ இந்த படத்தை ‘சண்டக்காரி தி பாஸ்’ என்ற பெயரில், தமிழில் தயாராகி உள்ளது. விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
ஆர்.மாதேஷ் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். இவர், விஜய் நடித்த ‘மதுர,’ பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ வினய் நடித்த ‘மிரட்டல்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

நடிகை ஸ்ரேயா, இயக்குனர் மாதேஷ், நடிகர் விமல்
மேலும் பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், தெலுங்கு பட வில்லன் தேவேந்தர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பிரதீப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பவுடர் படத்தின் முன்னோட்டம்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87', ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, அடுத்ததாக பவுடர் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி, ஆதவன் அகல்யா வெங்கடேசன், நிகில் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
திரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர். ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார். ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘டக்கர்’ படத்தின் முன்னோட்டம்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘டக்கர்’. நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இப்படத்தில், அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா, மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

திவ்யான்ஷா, சித்தார்த்
இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”. வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கௌதம் ஜி.ஏ. படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா விக்ரமன் நடிப்பில் உருவாகும் ‘க்’ படத்தின் முன்னோட்டம்.
தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கும் இப்படத்தில் அனிகா விக்ரமன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகேஷ், அனிகா
உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.
அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






