என் மலர்
முன்னோட்டம்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காயல் படத்தின் முன்னோட்டம்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
எம்.சக்திவேல் இயக்கத்தில் சிங்கம்புலி, வையாபுரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தகவி’ படத்தின் முன்னோட்டம்.
‘ஆறடி’ என்ற பெயரில் பெண் வெட்டியானின் கதையை படமாக்கி பாராட்டுகளை பெற்ற படக்குழுவினர் அடுத்து, ‘தகவி’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான தரமான படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் பவாஸ், குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். ராகவ், ஜெய்போஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, சிங்கம்புலி, அஜய் ரத்தினம், வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், வெங்கல்ராவ், சாப்ளின் பாலு, கிங்காங், ஐந்து கோவிலான் ஆகியோர் நடித்துள்ளனர்.
கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைத்து இருக்கிறார். எம்.சக்திவேல் கதை-வசனம் எழுத, சந்தோஷ்குமார் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். எஸ்.நவீன்குமார் தயாரித்து இருக்கிறார்.

தகவி படக்குழு
இந்த படம் பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளி இருக்கிறது. நவடா சர்வதேச படவிழா, பாரத் சர்வதேச படவிழா, மராட்டிய சர்வதேச படவிழா, மாஸ்கோ படவிழா ஆகிய படவிழாக்களில் விருதுகளை பெற்றதுடன், மேலும் பல படவிழாக்களிலும் திரையிடுவதற்காக ‘தகவி’ படம் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழிப்படுத்துவது சவாலானது என்ற கருத்தை சித்தரிக்கும் படம், இது.
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கா படத்தின் முன்னோட்டம்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

ஆண்ட்ரியா
படம் குறித்து இயக்குனர் நாஞ்சில் கூறியதாவது: ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார்.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷிவபாரதி, ஜாய் பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜலிங்கா படத்தின் முன்னோட்டம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ். இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா. இப்படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நடித்துள்ளார். மேலும் மாறன்பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யகண்ணன் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை செந்தில் கருப்பையா கவனிக்கிறார். வல்லவன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஷிவபாரதி இயக்கியிருக்கிறார்.

ராஜலிங்கா படக்குழு
இப்படம் குறித்து இயக்குனர் ஷிவபாரதி கூறியதாவது: “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். அழகை பார்த்து காதல்வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம்.
ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ் சினிமா மீது பழி போடப்பட்டது. இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது. இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது. அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.
“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

சாம் ஜோன்ஸ், ஆனந்தி
பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் முன்னோட்டம்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்துள்ள புதிய படம் ‘திட்டம் இரண்டு.’ திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி உள்ளது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது: “ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சையத் இயக்கத்தில், அபி சரவணன் வழங்கும் தராதிபன் படத்தின் முன்னோட்டம்.
ஆர்.எஸ்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சையத் இயக்கத்தில், அபி சரவணன் வழங்கும் திரைப்படம் தராதிபன். இப்படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் யாமா படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.
மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. பிரபல சக்தி பிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் தராதிபன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக அபிசரவணன், நாயகியாக பிரியங்கா நடிக்கிறார்கள். சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முத்து கணேஷ் இசையமைக்க இருக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கசட தபற’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய 6 பேர் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளனர். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர்.

விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி உள்ள கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
"லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் திகில் கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படமாக ‘கலர்ஸ்’ தயாராகி இருக்கிறது. நகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இவர்களுடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜார் டைரக்டு செய்து இருக்கிறார். அஜி இட்டிகுலா தயாரித்துள்ளார். படம், கோட்டயம் மற்றும் சென்னையில் வளர்ந்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா. யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். யோகிபாபுவுடன் வில்லனாக பொன் குமரன், வில்லியாக காவியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான்.

யோகிபாபு
அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது”. என்றார்.
சையத் இயக்கத்தில் விஜு, லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடிப்பில் உருவாகி உள்ள ‘யாமா’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார்.
நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். "அங்காடித் தெரு" "அசுரன் " ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார்.

யாமா படக்குழு
மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் செகண்ட் லுக் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.






