என் மலர்
முன்னோட்டம்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘அதிகாரம்’ படத்தின் முன்னோட்டம்.
‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்த கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அதிகாரம்’. இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.
பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உதவியாளர் துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.
இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
இராஜமோகன் இயக்கத்தில் அதர்வா, பூஜா ஜவ்வேரி, இசக்கி பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் அட்ரஸ் படத்தின் முன்னோட்டம்.
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய இராஜமோகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கி வருகிறார் இராஜமோகன்.

அதர்வா, இசக்கி பரத்
இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
எஸ்.டி.புவி இயக்கத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஜயன்’ படத்தின் முன்னோட்டம்.
ஓகே சினிமாஸ் வழங்க சுப்பிரமணிய சக்கரை, செந்திலரசு சுந்தரம், தொல்காப்பிய புவியரசு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விஜயன். இப்படத்தை எஸ்.டி.புவி இயக்கி இருக்கிறார். இவர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சங்கர், ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அலிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். ராஜேந்திரன், திருச்செல்வம் படத் தொகுப்பையும், ச.முருகானந்தம் இணை தயாரிப்பையும் கவனித்திருக்கிறார்கள்.

விஜயன் படக்குழு
தலித் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்
படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் சாயம் படத்தின் முன்னோட்டம்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா, பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி, இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாயம் படத்தின் போஸ்டர்
நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஷிரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம்.
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

டிக்கிலோனா படத்தின் போஸ்டர்
சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி, டயானா அமீது, பார்வதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் முன்னோட்டம்.
சஸ்பென்ஸ்-திகிலுடன் கூடிய ‘மெமரீஸ்’ என்ற படம், அடர்ந்த காட்டுக்குள் படமாகி இருக்கிறது. அதில் கதாநாயகனாக வெற்றி நடித்து இருக்கிறார். இவர், ‘8 தோட்டாக்கள், ’ ‘ஜீவி’ ஆகிய படங்களில் நடித்தவர். அவருக்கு ஜோடியாக டயானா அமீது, பார்வதி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். சிஜூ தமீன்ஸ் தயாரித்து இருக்கிறார்.
‘மெமரீஸ்’ படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘இது ஒரு சஸ்பென்ஸ் திகில் படம். காதலும் இருக்கிறது. மேலும் இது ஒரு புதிய முயற்சி. பெரும் பகுதி காட்சிகளை அடர்ந்த காட்டுக்குள் படமாக்கி இருக்கிறோம்.

வெற்றி
படத்தின் கதை எனவென்றால் ‘‘ஒரு வனப்பகுதி. அங்கு ஒரு பாழடைந்த கட்டிடம். அந்த இடத்தில் கதாநாயகன் கண் விழிக்கிறார். நினைவாற்றலை இழந்த அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. டாக்டரிடம் அவர், ‘‘நான் யார்?’’ என்று கேட்கிறார். ‘‘முதலில் உன்னை யார் என்று நீயே கண்டுபிடி’’ என்கிறார், டாக்டர்.
தான் யார் என்று கண்டுபிடிக்க கதாநாயகன் மீண்டும் வனப்பகுதிக்குச் செல்கிறார். அவர் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? என்பது உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது’’. இவ்வாறு சாம் பிரவீன் தெரிவித்துள்ளார்.
லீனா மணிமேகலை இயக்கத்தில் அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் நடிப்பில் உருவாகி இருக்கும் மாடத்தி படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் லீனா மணிமேகலை தன் கருவாச்சி பிலிம்ஸ் பேனரில் எழுதி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் மாடத்தி. "ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்" என்ற மேற்கோளுடன் வரும் இப்படம் தமிழ்நாட்டின் தென்கோடியில், 'காணத்தகாதோர்' என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது.
தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மற்றவர்களால் கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாகிய இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு 'அ'தேவதைக் கதை மாடத்தி.

மாடத்தி படக்குழு
மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர். ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கூட்டுநிதியில் தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பாவனா கோபராஜு, பியூஷ் சிங் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.
அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக மக்களே பங்கேற்றுள்ளனர். தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய, இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கி இருக்கும் தோப்புக்கரணம் படத்தின் முன்னோட்டம்.
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கைலா படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
தோப்புக்கரணம் படத்தில் கோகன், அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

தோப்புக்கரணம் படக்குழு
இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இந்தியாவாக வலம் வந்த ஸ்டீவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் முன்னோட்டம்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

அயலான் படக்குழு
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது.

யோகிபாபு
இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர்.
ஆர்.அரவிந்த் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ படத்தின் முன்னோட்டம்.
நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘லாக்கப்’ படத்தை அடுத்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திரா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விவேக் பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்
படத்தை பற்றி தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது: ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.






