என் மலர்
முன்னோட்டம்
கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் முன்னோட்டம்.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்பலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் ஓமணப்பெண்ணே. இப்படத்தில் ஹரீஸ் கல்யாணும், பிரியா பவானி சங்கரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் கவனிக்கிறார்.
“இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும்” என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.

ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது: “படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு கதையில், விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். ‘டாணாக் காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி உள்ளார். இவர், இயக்குனர் வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்
இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார்.

விக்ரம் பிரபு
‘டாணாக்காரன்’ பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: “தமிழ்நாட்டில், 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே கதை. இது, இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை.
51 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.” என தெரிவித்தார்.
கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படத்தை கார்த்திக் சவுத்ரி என்பவர் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

வாணி போஜன், விக்ரம் பிரபு
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் முன்னோட்டம்.
சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.
படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது: வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

கன்னித்தீவு படக்குழு
அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.
எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் அழகிய கண்ணே படத்தின் முன்னோட்டம்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
இதில் அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார்.
ஹென்றி இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலினா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜா மகள்’ படத்தின் முன்னோட்டம்.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அதன் இயக்குனர் ஹென்றி கூறியதாவது: ‘‘பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும்போது நம் இயலாமையை காரணம் காட்டி, ‘‘முடியாது’’ என்று சொல்லி வளர்த்தால், அதன் பிறகு பிள்ளைகள் எதற்கும் ஆசைப்படவே தயங்குவார்கள் என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.

இதில், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னிமாடம்’ வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.முருகேசன் தயாரிக்கிறார். சென்னை, மகாபலிபுரம், திருத்தணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.
"வி ஸ்டுடியோஸ்" நிறுவனம் ஸ்ரீ சரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ள படம் 'கண்ணாடி', இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆன்யா சிங், சந்தீப் கிஷன்
'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி உள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கே.எல்.பிரவீன் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மட்டி’ படத்தின் முன்னோட்டம்.
இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: “மட்டி படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருந்தன. 14 கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.

மட்டி படக்குழு
எல்லோரும் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டிரைலரில் பார்த்த பிரமிப்பு படத்திலும் இருக்கிறது. படம் 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேச்சுலர்’ படத்தின் முன்னோட்டம்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘பேச்சுலர்’. திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்வது எப்படி? என்ற பரபரப்பான பிரச்சினையை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஜீ.வி.பிரகாசுடன் திவ்ய பாரதி, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். டில்லிபாபு தயாரித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி
படத்தை பற்றி இயக்குனர் சதிஸ் கூறியதாவது: “இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொள்ளாச்சியில் இருந்து வேலைக்காக பெங்களூருக்கு போகும் இளைஞரை பற்றிய கதை. அவர் அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார். இரு வருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. உறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை. இது சினிமா போல் இருக்காது. காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் முன்னோட்டம்.
ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள். எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஈஷா ரெப்பா, ஜிவி பிரகாஷ் குமார், சாக்ஷி
இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இது உருவாகி உள்ளது. கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நந்திதா
படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
வி.சாய் தயாரிப்பில் தி.சம்பத் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார். V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் யூ/ஏ சான்றிதழ் வழங்க பட்டுள்ளது. திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது.

மாயத்திரை படத்தில் அசோக் - சாந்தினி
இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






