என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார், அஷ்வதி, சுஹாசினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், ரோஷ் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சமரன்’. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். 

    தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.

    சமரன் படக்குழு
    சமரன் படக்குழு

    படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது: “
    இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது சரத்குமார் தான். இயக்குநருக்கும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்”. இவ்வாறு அவர் கூறினார். 
    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா. யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். யோகிபாபுவுடன் வில்லனாக பொன் குமரன், வில்லியாக காவியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான். 

    யோகிபாபு
    யோகிபாபு

    அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது”. என்றார்.
    செல்வ அன்பரசன் இயக்கத்தில் மீரா மிதுன், தருண் கோபி, கோதண்டம், முல்லை நடிப்பில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஆர். சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு "பேய காணோம்" என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

    செல்வ அன்பரசன் இயக்கி உள்ளார். மிஸ்டர் கோளாறு இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜ்.ஓ.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஏ.கே.நாகராஜ் மேற்கொள்கிறார். 

    மீரா மிதுன்
    மீரா மிதுன்

    இப்படத்தின் கதை பற்றி படக்குழு கூறியதாவது: “வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது.” என தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
    பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
    இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். இவர் அடுத்ததாக ஹனு-மான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

    முதல் அனைத்திந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மானுக்காக சோம்பி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைகிறது. ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க போகும் ஹனு-மானுக்காக இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுடன் பிரசாந்த் வர்மா கைகோர்த்துள்ளார். இப்படத்தின் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டு இருக்கிறார்.

    இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு தனது இலக்கை ஒரு உண்டிகோல் மூலம் குறி பார்ப்பதை காணலாம். சூப்பர் ஹீரோவாக நடிப்பதற்காக கடும் பயிற்சிகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார்.

    ஹனு மான்

    இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளிவரவுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    சலங்கை துரை இயக்கத்தில் எம்.ஆர் தாமோதர், விதிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடத்தல்’ படத்தின் முன்னோட்டம்.
    கரண், வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் ‘கடத்தல்’.  நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்‌ஷன்ஸ் தயாரிக்க கதாநாயகனாக எம்.ஆர் தாமோதர் அறிமுகமாகிறார். 

    கடத்தல் படக்குழு
    கடத்தல் படக்குழு

    கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். சுதா,சிங்கம் புலி, பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம், நிழல்கள் ரவி க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன்  மற்றும் பலர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது ‘கடத்தல்’.
    ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முன்னோட்டம்.
    மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘கோடியில் ஒருவன்’. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அரசியல் திரில்லர் கதையம்சத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். கே.ஜி.எப். படத்தின் வில்லன் ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

    ஆத்மிகா, விஜய் ஆண்டனி
    ஆத்மிகா, விஜய் ஆண்டனி

    மேலும் ஐ.எம்.விஜயன், பிரபாகரன், சச்சின் கெடேக்கர், ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். லியோ ஜான் பால் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
    ஷரவணன் சுப்பையா இயக்கத்தில் அனேகா, கதிரவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மீண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
    அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர், ஷரவணன் சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார், ஷரவணன் சுப்பையா. கதாநாயகியாக நட்பே துணை பட நடிகை அனேகா நடித்துள்ளார். இதில் இயக்குனர் ஷரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஓரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.

    அனேகா, கதிரவன்
    அனேகா, கதிரவன் 

    படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூ மந்திரகாளி’ படத்தின் முன்னோட்டம்.
    ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ சூ மந்திரகாளி’. புதுமுக நடிகர் கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க கன்னட சினிமாவை சேர்ந்த சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், வி..ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம் வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இப்படத்திற்கு முகமது பர்ஹாண் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன் இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசை அமைத்துள்ளார்.

    சூ மந்திரகாளி படக்குழு
    சூ மந்திரகாளி படக்குழு

    பங்காளியூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்கிறார்கள். கதாநாயகன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியகாரனை கூட்டி வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான். 

    அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும், அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’ 
    சுனில் டிக்சன் இயக்கத்தில் ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் பெருமையுடன் வழங்கும் ‘தூநேரி’ படத்தின் விமர்சனம்.
    ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் தூநேரி. இப்படத்தை சுனில் டிக்சன் இயக்கி இருக்கிறார். இவர் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா, குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

    மேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் விஷுவல் எபெக்ட் ஸ்டூடியோவில் 4 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.  பல விளம்பர படங்களை இயக்கி இருக்கும், சுனில் டிக்சன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கலையரசன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

    தூநேரி என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர். இப்படத்தில் கதையின் நாயகனாக சார்பட்டா பரம்பரை புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார். கதாநாயகனாக நிவின் கார்த்திக் கதாநாயகியாக மியா ஶ்ரீ நடித்துள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் ஜான் விஜய்யின் கதாபாத்திரம் குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு உருவாக்கப் பட்டிருக்கிறது என்று இயக்குனர் சுனில் டிக்சன் தெரிவித்துள்ளார்.

    தூநேரி படத்தின் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 70 நாட்கள் நடைபெற்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் வெள்ளித்திரையில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
    காளிங்கன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவான் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் காளிங்கன் இயக்கத்தில் அம்மன்யா மூவீஸ் சார்பில் சி.வி.மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்”. மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

    இப்படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    ஆரி அர்ஜுனன்
    ஆரி அர்ஜுனன்

    இப்படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கிறார். பிரசன் பாலா இசையமைத்துள்ள இப்படத்துக்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுல் விஜய் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    நகுல் நடிப்பில் உருவாக இருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
    5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் 'வாஸ்கோடகாமா' படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.


    படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது, "படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்கிற பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை. குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'.

    வாஸ்கோடகாமா
    வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் 

    இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி, வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்' என்றார்.

    படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை - என்.வி.அருண். சண்டைக்காட்சிகள்- விக்கி. கலை இயக்கம்- ஏழுமலை ஆதிகேசவன். எடிட்டிங் தமிழ்க்குமரன். நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
    அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’. விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியான், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    விஜய்சேதுபதி, டாப்ஸி
    விஜய்சேதுபதி, டாப்ஸி

    கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
    ×