என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    மாதவன் இயக்கத்தில் சிம்ரன், ஜெகன், சூர்யா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ராக்கெட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

    ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

    சிம்ரன், மாதவன்
    சிம்ரன், மாதவன்

    பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
    புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
    பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. 

    யோகி பாபு

    இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். 
    ஆர்.அரவிந்த் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘லாக்கப்’ படத்தை அடுத்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திரா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விவேக் பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்
    மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்

    படத்தை பற்றி தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது: ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்‌ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படத்தின் முன்னோட்டம்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    சிம்பு, கல்யாணி பிரியதர்‌ஷன்
    கல்யாணி பிரியதர்‌ஷன், சிம்பு

    மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. பிரவீன் கே.எல், இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    சமுத்திரகனி இயக்கத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, தம்பி இராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விநோதய சித்தம்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘விநோதய சித்தம்’. இப்படத்தை அவர் இயக்கி உள்ளதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    விநோதய சித்தம் படக்குழு
    விநோதய சித்தம் படக்குழு

    படத்தை பற்றி சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்.
    அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    விஷ்ணு விஷால்
    விஷ்ணு விஷால்

    அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.கே.பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    அன்கா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் முன்னோட்டம்.
    யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது. 

    அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ் இயக்க, அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

    கான்ட்ராக்டர் நேசமணி படக்குழு
    கான்ட்ராக்டர் நேசமணி படக்குழு

    அன்கா மீடியாவின் முதல் படைப்பாக தயாராகிறது. தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். 'மிருதன்' பட புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை 'ராட்சசன்' படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ் மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார். 
    அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
    கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். 

    சாம் ஜோன்ஸ், ஆனந்தி
    சாம் ஜோன்ஸ், ஆனந்தி

    “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.
    அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்.’ புகழ் கருடா ராம், ஐஸ்வர்யா, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    படத்தை பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது: ‘‘சூர்யாவை வைத்து, ‘சிங்கம்’ என்று படம் எடுத்தது போல், அருண் விஜய்யை வைத்து, ‘யானை’ என்று படம் எடுத்து வருகிறோம். கதாநாயகன் யானையைப்போல் பலமானவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும்.

    அருண்விஜய்
    அருண்விஜய்

    கிராமத்து பின்னணியில் தயாராகும் திகில் படம், இது. தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். 3 சண்டை காட்சிகள் உள்பட படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது’’ என்றார்.
    மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் முன்னோட்டம்.
    ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

    படத்தை பற்றி இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது: “பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார்.

    தர்ஷா குப்தா, ரிஷி ரிச்சர்ட்
    தர்ஷா குப்தா, ரிஷி ரிச்சர்ட்
     
    கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். 

    இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும்” என சொன்னார்.
    ராய் லட்சுமி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் முன்னோட்டம்.
    உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது. இதில் ராய்லட்சுமி, சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

    இப்படத்தில் ராய் லட்சுமி மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளாராம். சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்சாக வெளியிடப்படாமல் வைத்திருக்கிறார்கள்.

    ரோபோ சங்கர், ராய் லட்சுமி
    ரோபோ சங்கர், ராய் லட்சுமி

    இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    மகேஷ், மேக்னா
    மகேஷ், மேக்னா

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இப்படம் தயாராகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    ×