என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ‘அதிசய உலகம்’ படத்தை தயாரித்த டிட்டு புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கப்போவதுயாரு’. இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
    ‘அதிசய உலகம்’ படத்தை தயாரித்த டிட்டு புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கப்போவதுயாரு’. இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார். நாயகனாக ஷக்திஸ் காட், அறிமுக நாயகியாக வந்தனா நடிக்கிறார்கள்.

    இவர்களுடன் சைதன்யா, அத்விக், ஷ்யாம் சுந்தர், சதீஷ் ராமகிருஷ்ணன், கோட்டி, வெங்கட், சோனல் பானர்ஜி, சையத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    வசனம்-அத்விக், ஷக்திஸ்காட், இசை-ஆண்டன் ஜெப்ரீன்- ஷக்திஸ்காட். நடனம்-ராம், கதை,திரைக்கதை,வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம்- ஷக்திஸ்காட். தயாரிப்பு-பானு சித்ரா.

    படம் பற்றி இயக்குனர் ஷக்திஸ்காட் கூறும்போது.. “இன்று அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டாலும் கார்ரேஸ், பைக்ரேஸ் திருட்டுத் தனமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஜெயிக்கப்போவது யாரு’ படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறோம். ஐந்து குரூப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் ஆகியவற்றை வைத்து சீரியசான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

    பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
    ‘டார்லிங்-2’ படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் “விதி-மதி உல்டா”. வித்தியாசமான பெயரில் உருவாகும் இந்த புதிய படத்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.
    ‘டார்லிங்-2’ படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் “விதி-மதி உல்டா”. வித்தியாசமான பெயரில் உருவாகும் இந்த புதிய படத்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்தப் படத்தில் கதாநாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சென்ராய், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-மார்ட்டின் ஜோ. இசை-அஸ்வின், பாடல்கள்- கபிலன், எடிட்டிங்-புவன் ஸ்ரீனிவாசன், சண்டை பயிற்சி-ஸ்டன்னர் ஷ்யாம், தயாரிப்பு-ரமீஸ் ராஜா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்பாலாஜி. இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்.

    மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக்கூடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டா ஆகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும்?

    அது தான் “விதி-மதி உல்டா” படத்தின் கதையாகும். இதை காதல், காமெடி, பேன்டஸி கலந்த திரில்லிங் படமாக உருவாக்கி வருகிறார்கள்.

    இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் நகரங்களின் முக்கிய இடங்களில் நடக்கிறது. 
    மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் ‘இணைய தலைமுறை’. நாயகனாக அஸ்வின்குமார் நடிக்கிறார். நாயகி மனிஷாஜித்.
    மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் ‘இணைய தலைமுறை’. நாயகனாக அஸ்வின்குமார் நடிக்கிறார். நாயகி மனிஷாஜித். இவர் கம்பீரம் படத்தில் சரத்குமார் மகளாகவும், சில படங்களில் நாயகியாகவும் நடித்தவர். இவர்களுடன் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன் ராஜேந்திர நாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- ஆரோ, இசை- டி.ஜே.கோபிநாத், நடனம்- ரமேஷ்கமல், ஸ்டண்ட்-ஆர்.கே.முரளி,எடிட்டிங்- வில்ஸி, தயாரிப்பு-அம்பிகா முஜீப். கதை, தயாரிப்பு, இணை இயக்கம்- பெ.இளந்திருமாறன். திரைக்கதை, வசனம், இயக்கம்- சு.சி.ஈஸ்வர்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
    “கல்லூரி வாழ்க்கை என்பது சுவராஸ்யமானது. அது மட்டுமல்ல உல்லாச பறவைகளாக பாடித்திரியும் மாணவ- மாணவிகள் வாழ்க்கையில் பேஸ்புக், டுவிட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?. என்பதை காதல், மோதல், சென்டிமென்ட், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம். விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
    ஸ்டூடியோ கிரீன், அபிஅண்ட்அபி, திருக்குமரன் என்டர் டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறைவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கிறார்கள்.
    ஸ்டூடியோ கிரீன், அபிஅண்ட்அபி, திருக்குமரன் என்டர் டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறைவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கருணாகரன், சின்னுமோகன், ராதாரவி, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசை-சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு-விவேக்ஹர்சன், ஸ்டண்ட்-ஹரிதினேஷ், தயாரிப்பு-கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார். இயக்கம்-கார்த்திக் சுப்புராஜ்.

    படம் பற்றி கூறிய விஜய் சேதுபதி, ‘எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான படம்’ என்றார்.
    பாபிசிம்ஹா தனது பாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இது தனது நடிப்புக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படம் என்று சொல்லி இருக்கிறார். ‘அஞ்சலி, இதுவரை தான் நடித்த படங்களில் இது மறக்க முடியாதது என்று கூறினார்’.

    ‘அம்மா, அக்காள், தங்கை, காதலி, மனைவி என்ற பெண் சொந்தங்களின் மறுபக்கத்தை சொல்லும் ‘இறைவி’ விரைவில் திரைக்கு வருகிறது’ என்று படகுழுவினர் தெரிவித்தனர். இதை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
    மூவி மேஷன்ஸ் - எம்.ஜே பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மானசி’. நரேஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார்.
    மூவி மேஷன்ஸ் - எம்.ஜே பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மானசி’. நரேஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் நாயகியாக இதில் அறிமுகமாகிறார். இவர்களுடன் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    வசனம் -இருவி, ஒளிப்பதிவு -கண்ணன் பட்டேல், இசை -ஷிவ்ராம் , பாடல்கள் - திண்டுக்கல் சாமிநாதன், நடனம்-விவேக், எடிட்டிங்-அச்சுவிஜயன். கதை, திரைக்கதை, இயக்கம்- -நவாஸ் சுலைமான். இவர் மலையாள இயக்குனர்கள் கமல், பாசில் போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தயாரிப்பு -ஏ.பாஹின் முகமது, மேத்யூ ஜோசப்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... “கதாநாயகன் அன்பு (நரேஷ்குமார்) குலத்தொழில்ஆடு மேய்ப்பது. அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாக கருதுகிறான். ஒரு ஆடு காணாமல் போகிறது. பதை பதைத்துப் போய் விடுகிறான். மாயம் ஆன அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா? இல்லையா என்பதை புதிய கதை களத்தில் நெகிழ்ச்சியுடன் உருவாக்கி உள்ளோம். உயிரோட்டமான கமர்ஷியல் படைப்பாக ‘மானசி’ தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, ஊத்துக்காடு, கோம்பை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உருவாகி உள்ளது”என்றார்.
    ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்த கோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை தயாரித்து வருகிறார்.
    ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்த கோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை தயாரித்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக கத்திசண்டை படத்தையும் தயாரிக்கிறார்.

    நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால், வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்தது அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

    கதாநாயகி, மற்ற நடிகர்-நடிகைகள் பெயர் விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது. அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார். ‘கத்திசண்டை’ விஷால், வடிவேலு, சுராஜ் மூவர் கூட்டணியில் கமர்ஷியல்- காமெடி படமாக உருவாகிறது.

    எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
    8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட், பி. அருமைச்சந்திரன் தயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கும் புதிய படம் ‘பறந்து செல்லவா’. இந்த படத்தின் முழுப் படப்பிடிப்பும் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் நடந்தது.
    8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட், பி. அருமைச்சந்திரன் தயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கும் புதிய படம் ‘பறந்து செல்லவா’.

    இந்த படத்தின் முழுப் படப்பிடிப்பும் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் நடந்தது. சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒருநாள் படப்பிடிப்புடன் நாசர் முன்னிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். சிங்கப்பூரை களமாகக் கொண்டு முழுநீள நகைச்சுவைக் காதல் படமாக பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் பாஷா நாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா மற்றும் ஞானசம்பந்தன் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

    படத்தின் இன்னொரு கதாநாயகியாக சீன மக்களிடையே பெரும் புகழ் பெற்ற ஸ்டார் நடிகையான நரேல் கெங் நடிக்கிறார். இவர்களைத் தவிர சிங்கப்பூரின் பிரபல சண்டைப் பயிற்சியாளர் சன்னி பாங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

    ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் ‘குற்றப்பரம்பரை’.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் ‘குற்றப்பரம்பரை’. குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் போராட்டத்தை பேராசிரியர் ரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்தார். அந்த பதிவுகளை இயக்குனர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.

    இந்த படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்றது.
    விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம், எழில், எஸ்.எஸ்.ஸ்டான்லி, ஆர்.கே.செல்வமணி, சீமான், சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பாரதிராஜாவின் கனவு திரைப்படம். 1911-ம் ஆண்டு ஆங்கில அரசு கொண்டு வந்த கைரேகை சட்டத்துக்கு எதிராக, மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூரில் கிராமமக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அதை அடக்குவதற்காக ஆங்கிலேய ஆட்சியினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லபட்டார்கள். அந்த சம்பவம் திரைப்படமாகிறது.
    செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ். வாசன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெனிபர் கருப்பையா’. கதாநாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார்.
    செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ். வாசன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெனிபர் கருப்பையா’. கதாநாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், ரோகினி, பாத்திமா பாபு, செவுந்திரபாண்டி, மாஸ்டர் பரணி, சிவாஜி, ராஜ்முரளி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் தம்பி கோட்டா சங்கர் ராவ் இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.
    ஒளிப்பதிவு- வேணுகோபால் ஸ்ரீனிவாசன், இசை- வி.கிஷோர்குமார், பாடல்கள்- அண்ணாமலை, நடனம்-சர்வஜித், சண்டைப்பயிற்சி-‘நாக்அவுட்’ நந்தா, படத்தொகுப்பு- சாய்சுரேஷ், தயாரிப்பு- டி.எஸ்.வாசன், கதை, திரைக்தை, வசனம், இயக்கம்-ஜி.எம். சரவணபாண்டி.

    இவர் ராஜ்கிரண், ரேவதி நடித்த தலைமுறை படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “நிரந்தரமான வேலையில்லாமல் வாழ்க்கையை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண நிலையிலுள்ள ஒருவருக்கு வாழ்க்கை வசதி வரும் பொழுது அவரது மனநிலை மாற்றங்கள் என்ன என்பதை எடுத்துக் கூறும் கதை.

    யதார்த்தமான கிராமத்து பின்னணியில் ஒவ்வொரு இளை-ஞனும் வாழ்க்கையில் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளையும் இது சொல்லுகிறது. இந்த படத்துக்கு தணிக்கைகுழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது” என்றார்.
    கருப்பாய் ஆண்டாள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கிழக்கு சந்து கதவு எண்-108’. இது மர்மம் நிறைந்த திகில் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக சுபாஷ், கதாநாயகியாக யாஷிகா நடிக்கிறார்கள்.
    கருப்பாய் ஆண்டாள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கிழக்கு சந்து கதவு எண்-108’. இது மர்மம் நிறைந்த திகில் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக சுபாஷ், கதாநாயகியாக யாஷிகா நடிக்கிறார்கள். ‘சிட்டிசன்’ பட இயக்குனர் சரவண சுப்பையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலா, பிரசாத், வந்தனா ராணி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை-எஸ்.வேலன், ஒளிப்பதிவு-வேதா, தயாரிப்பு-ஏ.செந்தில், இயக்கம்-ஏ.செந்தில் ஆனந்த்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது... “தற்போது தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கவுரவ கொலைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இது போன்ற கொலைகள், தவறுகள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தால் தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், தவறுகள் பெரும்பாலும் நடைபெறாமல் நின்று விடும். அப்படி ஒரு கோணத்தில் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது.

    ‘சிட்டிசன்’ பட இயக்குனர் சரவண சுப்பையா இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், ‘நான் இதுவரை இயக்குனர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். இந்த படம் வெளியான பிறகு நல்ல நடிகர் என்பதும் தெரிய வரும் என்று தெரிவித்தார். அவரது நடிப்பு மட்டுமல்ல நிச்சயம் இது சமுதாயத்துக்கு நல்லது செய்யும் படமாக இருக்கும் என்றார்.
    ஜார்ஜ் பிலிம் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படம்‘கடல் தந்த காவியம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக அப்ரஜித், நாயகியாக அஸ்ருதா நடித்திருக்கிறார்கள்.
    ஜார்ஜ் பிலிம் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படம்‘கடல் தந்த காவியம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக அப்ரஜித், நாயகியாக அஸ்ருதா நடித்திருக்கிறார்கள். இசை-சரத் பிரியதேவ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு-பிரகாஷ் ஜியோ. இந்த படத்தை தயாரித்து இயக்கியது பற்றி அவரிடம் கேட்ட போது...

    “ஜாதி மதம் கடந்து காதலிக்கும் ஜோடி தற்கொலை செய்ய முயல்கிறது. அப்போது தேவாலயத்தின் மணி ஒலிக்கிறது. தேவ வாக்கியம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.

    மாதா கோவிலில் தஞ்சம் அடையும் அவர்களுக்கு தேவாலயத்தின் குருவானவர் மாதாவின் அற்புதங்களையும் பெருமைகளையும் சொல்கிறார். அறிவுரை கூறுகிறார். அதை கேட்டு காதல் ஜோடி தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா? என்பது கதை. இது நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த கதை.

    இந்த படத்துக்காக ஒரு ஓலை குடிசை. ஆலயத்தை தீவைப்பது போன்று ஒரு காட்சியை எடுத்தோம். காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட அந்த குடிசையில் தீவைத்த போது திடீர் என்று வீசிய சூறைக்காற்றால் அருகில் இருந்த உடை மரங்களிலும் தீ பிடிக்க காடே எரியத் தொடங்கிறது.

    போராடி தீயை அணைத்தோம். வடக்கன்குளம் கோவிலில் உள்ள மாதா சொரூபம் மீது மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி சூரிய ஒளிபடுவது போன்று ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதை மின்சார விளக்கை அமைத்து எடுக்க முயன்றோம். பல்வேறு தடைகள் காரணமாக அந்த காட்சியை படமாக்க முடியவில்லை. பின்னர் அதை ‘கிராபிக்ஸ்’ செய்து இருக்கிறோம்.

    இதுபோல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இதை படம் ஆக்கி இருக்கிறோம். இந்த படத்தில் ‘டூயட்’ பாடலையும் சேர்த்திருக்கிறோம். விரைவில் ‘கடல் தந்த காவியம்‘ திரைக்கு வருகிறது” என்றார்.
    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’. இந்த படத்தின் கதாநாயகன் சோமசுந்தரம். இவர் ‘ஆரண்ய காண்டம்‘. ஜிகர்தண்டா படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர்.
    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’. இந்த படத்தின் கதாநாயகன் சோமசுந்தரம். இவர் ‘ஆரண்ய காண்டம்‘. ஜிகர்தண்டா படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர். கதாநாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி, ரம்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மு.ராமசாமி, எழுத்தாளர்கள் பாவா செல்லத்துரை சா.பாலமுருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு- செழியன், இசை-சான் ரோல்டன், பாடல்கள்-யுகபாரதி, படத்தொகுப்பு-சண்முகம் வேலுசாமி. தயாரிப்பு-எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. இயக்கம்-குக்கூ ராஜுமுருகன். படம் பற்றி அவர் கூறுகிறார்...

    உலக மயமாக்கல், நவீன இந்தியா என்று கூறி மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து விட்டது போன்ற மாயையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதை பேசும் படம் இது. தருமபுரிதான் கதை களம். இந்த பகுதி மக்களையும் நடிக்க வைத்திருக்கிறோம். கிராமத்தில் இருக்கிற மன்னாதி மன்னன் தான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி தன்னை கண்டுகொள்வதில்லையே என்று கோபப்படுகிறார். இதற்காக அரசியல்வாதியை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி அவன் கண்டுபிடிக்கும் வழிமுறைதான் கதை.

    இதில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. இது சமூக நோக்கமும், அக்கறையும் கொண்ட படம். நாம் ஜோக்கர்களாக பார்ப்பவர்கள் எல்லாம் உண்மையில் ஜோக்கர்கள் அல்ல. அப்படியானால் உண்மையான ஜோக்கர்கள் யார்? என்பதற்கான விடைதான் இந்த கதை.
    ×