என் மலர்tooltip icon

    சினிமா

    குற்றப்பரம்பரை
    X

    குற்றப்பரம்பரை

    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் ‘குற்றப்பரம்பரை’.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் ‘குற்றப்பரம்பரை’. குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் போராட்டத்தை பேராசிரியர் ரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்தார். அந்த பதிவுகளை இயக்குனர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.

    இந்த படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்றது.
    விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம், எழில், எஸ்.எஸ்.ஸ்டான்லி, ஆர்.கே.செல்வமணி, சீமான், சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பாரதிராஜாவின் கனவு திரைப்படம். 1911-ம் ஆண்டு ஆங்கில அரசு கொண்டு வந்த கைரேகை சட்டத்துக்கு எதிராக, மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காம நல்லூரில் கிராமமக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். அதை அடக்குவதற்காக ஆங்கிலேய ஆட்சியினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லபட்டார்கள். அந்த சம்பவம் திரைப்படமாகிறது.
    Next Story
    ×