என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’. என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்குபிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள்.
    டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’.

    என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்குபிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

    நாயகன் விஜய் வசந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். கவுரவ வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு–ஏ.வெங்கடேஷ், இசை–பிரேம்ஜி, எடிட்டிங் –பிரவீன் பாடல்கள்– யுகபாரதி, வசனம் –ராதா கிருஷ்ணன்,ஸ்டண்ட் – கணேஷ்குமார்

    நடனம் –விஜிசதீஷ், தயாரிப்பு–வி.வினோத்குமார், கதை, திரைக்கதை,இயக்கம்– பி.ராஜபாண்டி

    படம் பற்றி இயக்குனர் பி.ராஜபாண்டியிடம் கேட்ட போது....

    இது கமர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது? சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை படமாக எடுத்திருக்கிறோம்” என்றார்.
    எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது”. இதில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.
    எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது”. இதில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட், இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, டி.பி.கஜேந்திரன், பரத்கல்யாண், சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ஆர்.எஸ்.செல்வா, இசை-ஹித்தேஷ் முருகவேல் எடிட்டிங்- ராஜாமுகம்மது, நடனம் -சிவசங்கர், ஸ்டண்ட்-ஹரி தினேஷ்.
    தயாரிப்பு - வி.டி. ரித்திஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்-எல்.ஜி.ரவிசந்தர்.

    இயக்குனர் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இயக்குகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் நாயகனின் அம்மா இறந்திருக்க நாயகன் சந்தோஷ், நாயகி சாந்தினி ஆகியோர் கதறி அழும் காட்சி படமாக்கப்பட்டது.

    அப்போது நாயகன், நாயகி நடிப்பை பார்த்து படத்தின் இயக்குனர் கண்ணீர் வடித்தார். இது போல் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்களும், சுற்றியிருந்த லைட் மேன்களும் உணர்ச்சி மேலிட அழுதனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    விகோசியா மீடியா தயாரித்துள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’. இந்த படத்தின் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக ரக்ஷாராஜ் நடித்துள்ளார்.
    விகோசியா மீடியா தயாரித்துள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’. இந்த படத்தின் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக ரக்ஷாராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோ பாலா, யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-சுரேஷ், இசை-சுகுமார், தயாரிப்பு-மணிகண்டன், நாகேஸ்வரன், இயக்கம்- எஸ்.டி.குணசேகரன்.

    படம் குறித்து நாயகன் நிதின் சத்யா கூறும்போது...

    “நகைச்சுவைக்கும், திகிலுக்கும், மக்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலை மாறி இரண்டையும் ஒன்றாக இணைத்து தயாரிக்கும் படங்களுக்கு தற்போது பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த ரசனைக்கு ஏற்றவாறு ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ படம் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

    பாண்டி என்னும் குரங்கு கதாப்பாத்திரம் இந்த படத்தின் முக்கிய அம்சம். எதிர்பாராத விதமாக இறந்து போனவரின் ஆவியான இந்த பாண்டி, அவரை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை திகில் கலந்த நகைச்சுவை யோடு இந்த படத்தில் கூறி உள்ளோம். சுரேஷின் ஒளிப்பதிவும், சுகுமாரின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது” என்றார். “அனைவரையும், குறிப்பாக குழந்தைகளை கவர கூடிய படம் இது” என்று இயக்குனர் எஸ்.டி. குணசேகரன் கூறினார்.
    லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `சாவடி'.800 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷில்பா நடிக்கிறார்.
    லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `சாவடி'.800 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷில்பா நடிக்கிறார். இவர்களுடன் நான்கடவுள் ராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ், தீரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- சிவிலோராஜா, இசை-பிரவின்சைவி, படத்தொகுப்பு- சந்திர குமார் ஜி, ஸ்டண்ட்-திலீப் சுப்புராயன், தயாரிப்பு- வி.என்.ரஞ்சித் குமார், இது இவர் தயாரிக்கும் 3-வது படம்.  இயக்கம்-ஸ்ரீதர்.

    இந்த படத்தின்பூஜை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ஸ்ரீதர் இது பற்றி  கூறும் போது..... இன்றைய காலத்தில் பைக் இளைஞர்கள் மத்தியில் நகமும் சதையுமாக ஒன்றிவிட்டது. சாலைகளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் அதன் பின் விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதையே இந்தபடம்.

    இப்படிஒரு விழிப்புணர்வுசார்ந்த படத்தை இயக்க என்னை தூண்டியது என் கண் எதிரே நடந்த விபத்து ஒன்றுதான் காரணம். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 7 வருடம் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுடன்என்னுடையநேரத்தை செலவழித்திருக்கிறேன்.

    வருகிற 18-ம்தேதி தொடங்கி 40 முதல் 50 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த படம் ஜுலையில் திரைக்கு வரும்'' என்றார்.
    வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ’சங்கதி’. அறிமுக இயக்குநர் மகேஷ் பூபதி இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் வினோ ஹீரோவாக நடிக்கிறார். இவர் கூத்துப்பட்டறை மாணவர். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
    வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ’சங்கதி’. அறிமுக இயக்குநர் மகேஷ் பூபதி இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் வினோ ஹீரோவாக நடிக்கிறார். இவர் கூத்துப்பட்டறை மாணவர். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    குங்பூ மாஸ்டர் ராஜநாயகம், இதில் வில்லனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய குங்பூ போட்டியில் எட்டு முறை பிளாக் பெல்ட் வாங்கியவர்.

    இந்த படம் குறித்து இயக்குநர் மகேஷ் பூபதி கூறுகையில், “இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் சமூக கதை. காதல் என்றாலே வெறுக்கும் சமூகத்தில் உள்ள ஒருவனுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே கதை.

    சமுதாயத்தோடு பின்னி பிணைந்த அழகான காதல் கதையாகவும், காதலுக்காக ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் அன்றாட போராட்டங்களை சொல்லும் படமாகவும் ‘சங்கதி’ உருவாக உள்ளது” என்றார்.

    கண்மணி ராஜா இசையமைக்கிறார். ‘சங்கதி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் பாடல் பதிவுடன் தொடங்க உள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளிலும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஊட்டி, அந்தமான் ஆகிய பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    மருத்துவ மாணவர், என்ஜினீயரிங் மாணவி காதல் கதை கூறும் படம் எல்லாமே நீ தான்.
    மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எல்லாமே நீதான்’.

    இந்த படத்தை கே.எஸ்.சிவா எழுதி இயக்கி தயாரித்து, நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நமரதா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்.

    இசை–குட்லக்ரவி, ஒளிப்பதிவு– தசரதன், எடிட்டிங்–அபி, பாடல்கள்– ரமேஷ்பாரதி, விக்ரம் செந்தமிழ், நடனம்– ராம்முருகேஷ், கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம்–கே.எஸ்.சிவா.

    “மருத்துவ கல்லூரி மாணவரான சிவா பொறியியல் கல்லூரி மாணவி மைதிலியை காதலிக்கிறார். சிவாவை சந்திக்க மைதிலி காத்திருக்கும் போது போதை ஆசாமிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். தேடிப்போன சிவாவை ஆசாமிகள் கத்தியால் குத்த அதிலிருந்து தப்பி பிழைத்து காதலியை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறார் சிவா.

    அவருக்கு கல்லூரி மாணவர்கள் சிலர் உதவி செய்கிறார்கள். அதில் ஒரு பெண் சிவாவை காதலிக்கிறாள். அவளது காதலை ஏற்றாரா? கயவர்களை பழி வாங்கினாரா? என்பது படத்தின் திரைக்கதை. ‘எல்லாமே நீதான்’ முற்றிலும் காதல் கதையாக உருவாகி உள்ளது” என்றார்.
    எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அதை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் மிஞ்சும் என்பதை சொல்லும் படம் “எண்ணம் புது வண்ணம்”.
    எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அதை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் மிஞ்சும் என்பதை சொல்லும் படம் “எண்ணம் புது வண்ணம்”.

    இந்த படத்தில் நடிகர்கள் விவேக் ராஜ், திவ்யா நாகேஷ், ஆம்பூர் ஜெ.நேதாஜி, நிழல்கள் ரவி, தேவன், ‘நான் கடவுள்’ பாரதி, கிரேன் மனோகர், வாணியம்பாடி. எம்.பழனி, மீசை ராஜேந்திரன், யுவராஜ், அருண் கணேஷ், அருண் சவுந்தர், சத்திய சாய், சத்தியவாசன், சரவணபாபு, வேலுமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- சேகர் வி.ஜோசப், பின்னணி இசை- சங்கர் கணேஷ், இசை- சவுந்தர்யன், படத்தொகுப்பு- சுரேஷ் ஆர்ஸ், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, சண்டைப்பயிற்சி -எம்.கே.லீன்

    தயாரிப்பு: ஆம்பூர் ஜெ,நேதாஜி, எம்.ஜி.வேலுமணி, சி.கணேஷ், ஜி.எஸ்.சரவணபாபு, சி.சவுந்தர ராஜன், ஜெ.லோகநாதன், வாணியம்பாடி எம்.பழனி.

    சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டி பாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தலை பாலாறு, கனக நாச்சியம்மன் கோயில், ஒடுக்கத்தூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடை பெறுகிறது.
    விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் புரொடெக்ஷன்ஸ் எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் ‘கத சொல்லப் போறோம்’. இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
    விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் புரொடெக்ஷன்ஸ் எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் ‘கத சொல்லப் போறோம்’. இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ராகுல் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஜெமின் ஜோம் அயாநாத், இசை-பவன், எடிட்டிங்-விஜய், நடனம்- - எஸ்.எல்.பாலாஜி, பாடல்கள்-கல்யாண், வினோதன், தயாரிப்பு-எஸ்.கல்யாண், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.கல்யாண். இவர் நாளைய இயக்குனர் போட்டியில் 8 குறும் படங்களை இயக்கியவர். படம் பற்றி அவர் கூறியதாவது...

    “இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தைகளும் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம். இந்த படத்தை திரையிட்ட போது அதிகாரிகள் படத்தை பார்த்து அழுது விட்டனர். படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர்” என்றார்.

    படம் மே மாதம் வெளியாகிறது. சுபாகரன் தனது விக்டோரியா வாச் டாக் பட நிறுவனம் மூலம் இந்த படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.
    ரெயின்போ மூவி மேக்கர்ஸ் (பி) லிமிடெட் திரைப்பட கம்பெனி சார்பில் தயாரிக்கும் படம் ‘சாரல்’. இதன் நாயகனாக டி.வி.தொகுப்பாளர் அஸார், நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்கள். கோபால கிருஷ்ணன் ‘சாரல்’ படத்தின் கதாநாயகி தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
    ரெயின்போ மூவி மேக்கர்ஸ் (பி) லிமிடெட் திரைப்பட கம்பெனி சார்பில் தயாரிக்கும் படம் ‘சாரல்’. இதன் நாயகனாக டி.வி.தொகுப்பாளர் அஸார், நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்கள். கோபால கிருஷ்ணன் ‘சாரல்’ படத்தின் கதாநாயகி தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

    நாயகன் அஸார் நண்பர்களாக காதல் சுகுமார், பவர்ஸ்டார் சீனிவாசன், கோவை பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்.
    வில்லனின் மூன்றாவது அடி ஆளாக இதில் பவர்ஸ்டார் நடிக்கிறார். இவர் முதல் அடி ஆளாக வரவேண்டும் என்று ஆர்வகோளாறால் ஏற்படும் சம்பவங்களே நகைச்சுவை கலகலப்பாக அமைந்திருக்கிறது. கோவை பாபு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இசை- இஷான் தேவ், ஒளிப்பதிவு -சங்கரலிங்கம் செல்வகுமார், படத்தொகுப்பு- விஷ்ணு நாராயணன், ஸ்டண்ட்- தவசி ராஜ், நடனம்- ராதிகா, ராம்சிவா. தயாரிப்பு-வி.ஏ.ஏ. ஆர்.கதிகை, இயக்கம்- டி.ஆர்.எல்.

    பஸ்சில் பயணம் செய்யும் நாயனுக்கும் நாயகிக்கும் காதல் ஏற்படுகிறது. பஸ்சில் இருந்து இறங்கும் நாயகன் இன்னொரு வாகனம் மோதி உயிர் இழக்கிறான். இதை நேரில் பார்க்கும் நாயகி பைத்தியம் ஆகிறார். இப்படி ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

    படப்பிடிப்பு பேரம்பாக்கம், மரக்காணம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்தது. மே மாதம் இறுதியில் ‘சாரல்’ படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சர்வதேச நாய் கடத்தல் கும்பலின் அட்டகாசம் ‘ஜுலியும் நாலுபேரும்’
    ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸ் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ் ஆர்.வி.க்கு இது முதல் படம்.

    படம் குறித்து இயக்குநர் சதீஷ் ஆர்.வி.கூறுகையில், “இந்த படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப்பற்றியது. அது மட்டுமல்ல முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்.

    டி.வி.புகழ் அமுதவாணன், ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

    இதில் ஜூலி என்ற பாத்திரத்தில் நடித்த நாய், இந்த படத்தின் ஹீரோ மூலம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘பெக்லி’ வகையை சேர்ந்த லக்கி என்ற நாய்” என்றார்.

    இந்த படத்தில் கே.ஏ.பாஸ்கர் ஒளிப்பதிவாளராகவும், ரகுஸ்ரவன்குமார் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்கள்.

    ஒளிப்பதிவு– கே.ஏ.பாஸ்கர், இசை–ரகு சரவணகுமார், படத்தொகுப்பு– வ.மழைதாசன், நடனம்– இசட்.அருண், எழுத்து,இயக்கம்– சதீஷ்.ஆர்.வி.
    வெற்றிவேல் 567 மெகா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘நாய்க்குட்டி படம்’. இதில் டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன்-நாயகியாக நடிக்கின்றன.
    வெற்றிவேல் 567 மெகா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘நாய்க்குட்டி படம்’. இதில் டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன்-நாயகியாக நடிக்கின்றன. காதல் ஜோடியாக நிதின் சத்யா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதிசங்கர், பொன்னம்பலம், வாசுவிக்ரம், வையாபுரி, ஜெயமணி, போண்டாமணி, கிங்காங், சிசர் மனோகர், அழகு, வாமன் மாலினி, ரவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு-ஆனந்த், இசை-ஜெய.கே.தாஸ், நடனம்-ஷெரீப், ஸ்டண்ட்- நாக் அவுட் நந்தா, எடிட்டிங்-மாரீஸ் ஜி.வெங்கடேஷ்.
    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ரங்கா இவர் இயக்குனர்கள் எஸ்.டி. ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன், எல்.ஜி.ரவிசந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

    தயாரிப்பு-ஏ.வெற்றிவேல் இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவர். தியேட்டர்களையும் நடத்துபவர்.
    படம் பற்றி இயக்குனர் ரங்கா கூறும்போது....

    “மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை. ஏதாவது புதிதாக எதிர் பார்க்கிறார்கள். அதற்காக யோசித்தது தான் இந்தக்கதை. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய்விடுகிறது. அந்த நாயை தேடி நிதின் சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள், அத்துடன் அரசியல் வாதிகள் இருவர். இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள்? என்பது திரைக்கதை சுவாரஸ்யம். முதல் சீன் முதல் கடைசி சீன் வரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.
    வெர்ட்டிக்கள் பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கொள்ளிடம்’. புதுமுகம் நேசம் முரளி இயக்கி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக புதுமுகம் லூதியா நடிக்கிறார்.
    வெர்ட்டிக்கள் பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கொள்ளிடம்’.

    புதுமுகம் நேசம் முரளி இயக்கி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக புதுமுகம் லூதியா நடிக்கிறார். இவர்களுடன் ராசிக், வடிவுக்கரசி, இயக்குனர் வேல்முருகன், ராமச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு– ஆர்.ராஜகோபால், இசை– ஸ்ரீகாந்த்தேவா, படத்தொகுப்பு– எஸ்.பி.அகமத், ஸ்டண்ட்–எம்.கே.முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்– நேசமுரளி.

    “மனிதர்களில் 20 சதவீதம் பேர் தான் அழகாக பிறக்கிறார்கள். 80 சதவீதம் பேர் அழகானவர்கள் அல்ல. அழகில்லை என்று நினைப்பவர்கள் ஒரு தலையாகத்தான் காதலிக்க முடியும். அவர்கள் காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களை சொல்ல விடாமல் தடுத்து விடும்.

    அதையும் மீறி தேவதை மாதிரி ஒருத்தி அவனுக்கு அமைந்தால், இந்த உலகமே அவனுக்கு அழகாக தெரியும். அப்படி ஒரு அழகில்லாதவனின் காதல் கதை இது.

    சொந்த அழகை குறைத்து நடிக்க வேண்டும் என்று பல ஹீரோக்களிடம் கேட்ட போது நடிக்க மறுத்து விட்டார்கள். எனவே நானே அந்த வேடத்தில் நடிக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் ‘கொள்ளிடம்’ திரைக்கு வருகிறது” என்றார்.
    ×