என் மலர்
கிசுகிசு
பிரபல நடிகை நடுரோட்டுக்கு வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு சென்றுவிட்டதாக வெளிவந்த செய்தியை கேட்டு யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
அவர் ஒரு படத்தின் காட்சிக்காக அந்த நடிகையை நடுரோட்டில் நடந்துவரச் சொன்னார்களாம். நடிகையும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத பொதுமக்கள் நடிகையை கண்டுகொண்ட பிறகு அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படக்குழுவினரை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டதாம். உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி படக்குழுவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்களாம். நடிகையையும் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.

நட்சத்திர ஜோடி ஒன்று வரும் டிசம்பரில் திருப்பதியில் திருமணம் செய்யப் போகிறார்களாம்.
வெற்றிக்கு மறுபெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகரும், சித்தி பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ள அந்த நான்கெழுத்து நடிகையும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாளாகவே ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேரும் உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. திருப்பதியில் வைத்து இவர்களது திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருவரும சேர்ந்த தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படத்தை இருவருமே ரொம்பவும் எதிர்பார்த்து வருகிறார்கள். எனவே, அந்த படம் வெளிவந்த பிறகு, இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உயரமான நடிகை ஒருவர் பெரிய ஹீரோ, ரூ.5 கோடி சம்பளம் இருந்தால்தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவேன் என்று கண்டிஷன் போட்டு வருகிறாராம்.
உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படியிருக்கையில், இந்த பிரம்மாண்ட படம் நடிகைக்கு மார்க்கெட்டை எகிற வைத்துள்ளதாம். இனிமேல் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன், சம்பளமும் ரூ.4 கோடி கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். தன்னை ஒப்பந்தம் செய்யும் வரும் இயக்குனர்களிடம் இந்த கண்டிஷனை சொல்லி, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால்தான் கதையே கேட்கிறாராம்.

இதனால், ஒரு சரித்திர பட வாய்ப்பையே அவர் உதறி தள்ளிவிட்டாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அது இருந்தாலும் அதில் பெரிய ஹீரோ இல்லை என்பதால் அந்த படத்தை உதறிவிட்டாராம்.

உச்ச நடிகரின் இயக்குனர்களுக்கு தற்போது திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உச்சக்கட்ட நடிகர், பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் உச்சகட்ட நடிகரின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், உச்சகட்ட நடிகரும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்கி, அந்த படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
இரண்டெழுத்து பெயர் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்பொழுதுவரை அப்படத்தை பற்றிய பேச்சுக்கள்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. உச்சகட்ட நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்தை பற்றிய பேச்சுக்களை அடிபட்டு வருவதால் பிரம்மாண்ட இயக்குனருக்கு தன்னுடைய படத்தைப் பற்றிய கவலை தற்போது அவரது மனதுக்குள் எழுந்துள்ளதாம்.

இதனால் சமீபத்தில் அந்த இரண்டெழுத்து படத்தின் இயக்குனரை பிரம்மாண்ட இயக்குனர் வரவழைத்து ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, உங்கள் படத்தின் புரோமோஷன்களை குறைத்துக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் படத்துக்கு புரோமோஷன் செய்தால் மக்கள் என்னுடைய படத்தை மறந்துவிடுவார்கள் என்று எச்சரித்தாராம்.
அந்த இரண்டெழுத்து பட இயக்குனரும், பிரம்மாண்ட இயக்குனரின் எச்சரிக்கையை பொறுமையாக கேட்டுக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிவிட்டாராம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலாவது எச்சரிக்கையாக இருந்து படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவந்துவிடாதபடி படப்பிடிப்பை நடத்த அந்த இரண்டெழுத்து பட இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டாப் நடிகை ஒருவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் மிகவும் நெருக்கமாக சுற்றி வருகிறாராம்.
தமிழில் முதல் படத்திலேயே உச்சத்தில் சென்றுவிட்ட டாப் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் மேலும் உச்சத்துக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வந்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணைக் கவ்வினார் அந்த டாப் நடிகை.
தமிழ் திரையுலகம் அவரை கைவிட்டாலும் இந்தி திரையுலகம் அவரை அங்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டாப் நடிகை நடிக்கும் அந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். இரண்டு பேரில் டாப் நடிகைக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கிறதாம். இதனால், வெகுண்டெழுந்த மற்றொரு நடிகை, டாப் நடிகை தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் தயாரிப்பாளர் டாப் நடிகைக்கான காட்சிகளை அதிகமாக வைக்கச் சொன்னதாகவும் தன்னுடைய காட்சிகளை ரொம்பவும் குறைத்துவிட்டதாகவும் ஒரு புகார் ஒன்றை பாலிவுட் வட்டாரத்தில் பரப்பி விட்டிருக்கிறாராம்.
ஆனால், டாப் நடிகையோ இந்த புகார்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளாராம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அந்த நடிகர், சம்பள பிரச்சனையால் தனது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.
தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரவுடி நடிகர், அவரது கொள்கையை தற்போது மாற்றிவிட்டாராம். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தழுவ, தற்போது கதைகளுக்கு பதிலாக சம்பளத்தை வைத்து தான் படத்தை தேர்வு செய்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களையும், இனி நடிக்கப் போகும் படங்களையும் சம்பளத்தை வைத்து தான் முடிவு செய்கிறாராம்.
சம்பளம் பிரச்சனையால் தான், சமீபத்தில் தேசிய விருது இயக்குநரின் படத்தில் இருந்தும் நடிகர் விலகினாராம். தேசிய விருது இயக்குநரின் சென்னை படத்தில் விஐபி நடிகருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகிய ரவுடி நடிகர் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகியிருந்தார்.

நடிகரின் விலகலுக்கு கால்ஷீட் பிரச்சனை தான் காரணமாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் விலகியதற்கு கால்ஷீட் பிரச்சனை காரணமில்லையாம். சம்பள பிரச்சனையால் தான் நடிகர் விலகியதாக சென்னை படக்குழுவினரிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனது கொள்கைக்கு மீண்டும் திரும்பினால் அவருக்கு நல்லது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரசிகர்களின் மீம்ஸ்கள் ஒரு இயக்குனரையே அதிர வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நயன நடிகையும் காதலரும், சிவமான இயக்குனருமானவர் தற்போது சூர்ய நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இருந்தாலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இயக்குனர் வெளியிடாமலேயே இருக்கிறாராம்.
இதுநாள் வரை பொறுத்துப் பார்த்த சூர்ய நடிகரின் ரசிகர்கள், அந்த படத்தை பற்றியும், இயக்குனர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட ஆரம்பித்தார்களாம். இதனால் அதிர்ந்துபோன இயக்குனர் இப்போதைக்கு ரசிகர்களை சாந்தப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறாராம்.

அதாவது, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதைவிட, அந்த நடிகரின் புகைப்படத்தை வெளியிட்டால் ரசிகர்கள் சாந்தமாகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அந்த நடிகரின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டாராம். இதனால், தற்போது சூர்ய நடிகரின் ரசிகர்கள் சாந்தமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கூடிய சீக்கிரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட்டே ஆகவேண்டும் என்று ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.

ஏக்கத்தில் இருந்த ஒரு நடிகையை நடிகர் ஒருவர் கழட்டிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சாந்தமான கிரிக்கெட் வீரர் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பார் என்று ராய் நடிகை ரொம்பவும் ஏக்கத்தில் இருந்தாராம். ஏனென்றால், முன்னொரு காலத்தில் ராய் நடிகையும், இந்த கிரிக்கெட் வீரரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்து கொண்டிருந்தார்களாம்.
ஒருகட்டத்தில், சாந்தமான கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் விளையாட்டில் பின்னடைவு வர, திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு, ராய் நடிகையுடனான நட்பையும் துண்டித்து விட்டாராம். இருப்பினும், ஏற்கெனவே இருந்த நட்பின் அடிப்படையில் அந்த கிரிக்கெட் வீரர் தனக்கு எப்படியாவது அவருடைய படத்தில் வாய்ப்பு தருவார் என்று ராய் நடிகை ரொம்பவும் எதிர்பார்த்தாராம்.

ஆனால், சாந்தமான கிரிக்கெட் வீரரின் மனைவியோ இவருக்கும் ராய் நடிகைக்கும் இருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு அவர் பக்கமே தலைகாட்டக் கூடாது என்று கிரிக்கெட் வீரரிடம் தடலாடியாக சொல்லிவிட்டாராம். அதன்பிறகே, ராய் நடிகைக்கு கல்தா கொடுத்துவிட்டு, வேறு நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்தார்களாம்.

வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி வலம்வரும் நடிகர்கள் இருவருடனும் ஜோடி போட்டவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அந்த படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம் நடிகையை தூக்கிவிட்டது. இருந்தாலும், அந்த நடிகைக்கு தமிழ் சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், தனது கவனத்தை வேறு மொழி பக்கம் திருப்ப ஆரம்பித்தார்.
நடிகையின் போதாத காலமோ என்னவோ, அங்கேயும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த அந்த நடிகை தற்போது விபரீத முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அது என்னவென்றால், மாடலிங்க் துறையில் அந்த நடிகை இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவைவிட மாடலிங்கில் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் கேட்பவர்களிடம் எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு வருகிறாராம். ஆனால், உண்மையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான் மாடலிங்குக்கு கீழிறங்கி வந்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படத்தை யாரும் குழந்தைகளுககு காட்டாதீர்கள் என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பிரியமான நடிகை, தமிழிலும் தளபதி நடிகருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதன்பிறகு, தமிழ் பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை. பாலிவுட் படங்களில் கொடிகட்டி பறந்தவருக்கு ஹாலிவுட்டும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.
பாலிவுட்டிலேயே கவர்ச்சியில் எல்லை மீறியவர், ஹாலிவுட் சென்றால் சும்மா இருப்பாரா? இவரை ஹாலிவுட் கலைஞர்களும் தங்களுக்கு தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டனர். அப்படித்தான் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கிற ஹாலிவுட் படமொன்றில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் அவர் நிறைய கெட்ட வார்த்தைகள் வேறு பேசியிருக்கிறாராம். இதையெல்லாம் பார்க்க நடிகைக்கே ரொம்பவும் கூச்சமாக இருந்ததாம். எனவே, என்னுடைய படத்தை யாரும் குழந்தைகளுக்கு காட்டாதீர்கள் என்று தற்போது அறிவித்திருக்கிறாராம். இந்த அக்கறை படத்தில் நடிக்கும்போதே இருக்கவேண்டாமா? என்று நடிகையை பலரும் சாடி வருவதாக ஒரு பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் நிலவி வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

காமெடி நடிகர் ஒருவர் நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் நுழைத்து மாட்டிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார்.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு சௌகரியமாக இல்லையாம். இதனால், தன்னுடைய உதவியாளரிடம் அந்த அறையை மாற்றுமாறு சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பியவர், எப்போதும்போல் தனது அறைக் கதவை திறந்தாராம். உள்ளே பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். நிறைய பெண்கள் அவருடைய அறையில் படுத்துக் கிடந்தார்களாம். என்னடா வம்பா போச்சு என்று அதிர்ந்தவர் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.
அதன்பிறகுதான், அவரது மூளையில் தனது உதவியாளரிடம் அறையை மாற்றச் சொன்னது ஞாபகத்துக்கு வந்ததாம். அறையை மாற்றிய விபரத்தை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதவியாளரிடம் அந்த காமெடி நடிகர் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், அந்த அறையில் இருந்த பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த காமெடி நடிகரை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனராம்.
இதையடுத்து, அந்த காமெடி நடிகர் நடந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, அதன்பிறகே அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்.

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான 'ஏ' படத்தில் நடிக்கும் அந்த நடிகர், அவரது படத் தயாரிப்பாளரை மிரட்டுகிறாராம்.
சர்ச்சைக்கு பெயர் போன அந்த நடிகர் கடைசியாக நடித்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது 'ஏ' படத்தில் நடித்து வருகிறார். அதிலும் மூன்று 'ஏ' க்களை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே அந்த நடிகரின் படம் என்றால் சொன்ன நேரத்தில், சொன்னபடி ரிலீசாவதில்லை என்பது நாம் அறிந்ததே.
ஆனால் நடிகர் மீதான அந்த பெயரை நான் மாற்றித் தீருவேன், படத்தை சொன்ன நேரத்தில் ரிலீஸ் செய்வேன் என்று படத்தின் இயக்குநர் வைராக்கியதுடன் இருக்கிறார். ஆனால் இயக்குநரின் சபதம் பலிப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதுவும் நடிகர் மூலமாகத் தான் அந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது என்னவென்றால், அந்த படத்தில் நடிகரின் அறிமுக பாடலை பிரபல கவிஞர் ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த பாடலை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநரிடம் அந்த நடிகர் நச்சரிக்கிறாராம். நடிகரின் விருப்பத்தை தயாரிப்பாளரிடம் சென்று இயக்குநர் தெரிவிக்க, ஏற்கனவே படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது, எனவே பாடலை பிரம்மாண்டமாக எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
இதையடுத்து தயாரிப்பாளர் கூறியதை, நடிகரின் காதில் அப்படியே போட்டிருக்கிறார் இயக்குநர். தயாரிப்பாளரின் இந்த பதிலை கேட்டு கொந்தளித்த அந்த நடிகர், தயாரிப்பாளர் ஒத்துழைக்காவிட்டால், படத்தை பார்க்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு தானே அறிவுறுத்துவேன் என்று நடிகர் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் நடிகர் பிடிவாதமாக இருக்க, மறுபக்கம் தயாரிப்பாளர் அதேநிலையில் நிற்க, அந்த இயக்குநர் நடுவில் நின்று கொண்டு செய்வதறியாமல் சிக்கித் தவிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.