என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகை ஒருவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்களை குறிவைக்கிறாராம்.
    தமிழில் பட்டதாரி நடிகரின் படத்தில் அறிமுகமான டாப் நடிகை, தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டி வந்த அந்த நடிகை தெலுங்கு படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், நடிகைக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், தற்போது பாலிவுட்டில் முழுமூச்சில் இறங்கிவிட்டாராம்.

    மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தி படங்கள் நடிகைக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. இதையடுத்து தற்போது வருண நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    அடுத்து இந்தி பட உலகில் பெரிய நடிகர்களான கான் நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே நடிகையின் விருப்பமாக இருக்கிறதாம். அதற்கான முயற்சிகளிலும் நடிகை இறங்கியிருக்கிறாராம்.



    இந்தி பட உலகைப் பொறுத்தவரை கான் நடிகர்களுக்குத் தான் மதிப்பும், மார்க்கெட்டும் அதிகம். அவர்களுடைய படங்களில் நடிக்கும் போது, உடன் நடிக்கும் நடிகைகளும் மக்களால் கவனிக்கப்படும் நடிகைகளாகி விடுவார்கள் என்பதால், கான் நடிகர்களுடன் தான் நடிக்க வேண்டும் என்று நடிகை ஆசைப்படுகிறாராம்.

    தனக்கு விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நடிகை மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    பணப் பிரச்சனையால் பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியவர் பாஸ் நடிகர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காடு சம்பந்தமான படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    அந்த படத்தை நாயகன் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அந்த படம் மூலம் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் பண நெருக்கடிக்கு ஆளான பாஸ் நடிகர், சென்னையில் உள்ள தனது வீட்டை விற்கும் நிலைக்கு வந்துவிட்டாராம்.

    எனினும் எந்த வித கவலையுமின்றி நடிகர் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறாராம். இது அவரது நெருங்கிய நண்பர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதாம். நடிகரின் கைவசம் தற்போது ஒரு ஜல்லிக்கட்டு படம் மற்றும் ஒரு பிரமாண்ட படம் இருக்கிறது.

    தனது நண்பர்களுக்காக பல படங்களில் பணம் வாங்காமல் நடிக்கும், பாஸ் நடிகருக்கா இந்த நிலைமை வரவேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
    முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கும் இரண்டாவது பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த அந்த நடிகை வேண்டாம் என்று நடிகர் கூறியிருக்கிறாராம்.
    பட்டதாரி நடிகர், ஸ்டார் நடிகரின் மகள் இயக்கத்தில் நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட அந்த நடிகர், தனது அடுத்தடுத்த படவேலைகளில் கவனம் செலுத்தவிருக்கிறார். இதுதவிர நடிகரின் கைவசம் பல படங்கள் இருந்த போதிலும், நடிகர் ரவுடியாக நடித்த படத்திற்கான அடுத்த பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

    அந்த படத்திற்கான அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, இரண்டாவது பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகையுடன் படக்குழு பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருக்கும் அந்த நடிகை தமிழில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த இருபடங்களும் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.



    இந்நிலையில், பட்டதாரி நடிகரின் ரவுடி படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றால், ரூ.2 கோடியை சம்பளமாக தரவேண்டும் என்று நடிகை கேட்டிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவை இயக்குநர் நடிகரின் காதில் போட்டியிருக்கிறார். ஆனால் பட்டதாரி நடிகர், அந்த நடிகை வேண்டாம். திரைக்தையில் மாற்றத்தை கொண்டு வந்து வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குநரிடம் கூறிவிட்டாராம்.

    இருப்பினும், சம்பளத்தை கொஞ்சம் குறைத்து பேச தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    காதல் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அந்த நடிகை, கவர்ச்சி படங்களை வெளியிட்டு கவர்ச்சிக்கு மாற தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு நடிகை தூது விடுகிறாராம்.
    மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் என்பதன் மலையாள வார்த்தையுடைய அந்த படம், தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற பூ டீச்சர் கதாபாத்திரம் அனைத்து தரப்பினராலும் விரும்பி பார்க்கப்பட்டது. அந்த படத்தின் மூலம் அறிமுகமான 3 நடிகைகளுமே முன்னணி இடங்களை பிடிக்க இந்த படம் காரணமாக அமைந்தது.

    அந்த படத்தை தொடர்ந்து மூன்று நாயகிகளுக்குமே படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த மூன்று நடிகைகளுள் ஒருவரான நான்கெழுத்து நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பட்டதாரி நடிகருடன் அரசியல் படம் ஒன்றில் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். தற்போது அந்த நடிகை தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

    இதுவரை கவர்ச்சி இல்லாத பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக கவர்ச்சி உடை அணிந்து வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.

    இது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சிக்கு மாற தயார் என்று நடிகை விடும் தூது, என்று தெலுங்கு பட உலகினர் கூறி வருகின்றனர். டோலிவுட்டில் அந்த நடிகை வெற்றிநடை போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் உயரமான நடிகை, இயக்குநர்களுக்கு புதுப்புது கண்டிசன்களை போடுகிறாராம்.
    உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, தனது அடுத்த படங்களை நடிகை கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். மேலும் நடிகை அவரது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.

    அதற்கு முன்னதாக நடிகை நடித்த படங்கள் போதிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் பிரமாண்ட படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்ததால், தனது சம்பளத்தை ரூ.4 கோடி வரை நடிகை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்றும் நடிகை அடம் பிடிக்கிறாராம். தன்னை ஒப்பந்தம் செய்யும் வரும் இயக்குனர்கள் தனது கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டால் தான் நடிகை படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

    இந்நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் அவரது அடுத்த படத்தில் முதலமைச்சராக நடித்து வரும் படத்தில் குத்துப்பாடல் ஒன்றில் ஆட்டம் போட ரூ.2 கோடி வரை நடிகை சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். இது தெலுங்கு திரையுலகில் மற்ற நாயகிகளுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்குவதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் மை நடிகை, திருமணத்திற்கு முன்பாக தான் இதை செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம்.
    மை அர்த்தமுள்ள நடிகை தமிழில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், திருமணம் குறித்து நடிகையிடம் கேட்ட போது, தற்போது நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருவதால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறாராம்.



    காதலுக்கு அப்பறம் தான் திருமணம் என்றும் கூறியிருக்கும் நடிகை, காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும், உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் கண்டிஷனுக்கு ஏற்ற நபர் கிடைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தனது தாயின் மடியை தேடி செல்வதால், நாயகன் ஒருவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆனந்த நடிகை. தனது முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தொடர்ந்து, பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பிரகாச நடிகருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால், இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இந்நிலையில், நாயகியின் கைவசம் பல படங்களில் இருந்தாலும், அவரது நடிப்பில் சமீபத்தில் இரு படங்கள் ரிலீசாகியது. இதில் நாயகி குறித்து அவருடன் நடித்த லீலை நாயகன் பேட்டி ஒன்றில் கூறும்போது, பொதுவாக நாயகிகள் என்றால், அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு நாயகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நடிகை, அவரது காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு நேராக அவரது அம்மா இருக்கும் இடத்திற்கு சென்று விடுவாராம்.

    அம்மாவின்றி அந்த நடிகை வருவதுமில்லை, போவதுமில்லை. மேலும் படப்பிடிப்பில் நாயகி தன்னிடம் அவ்வளவாக பேசவேயில்லை என்றும் நாயகன் விளையாட்டாக கூறியிருக்கிறாராம்.
    தமிழில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், தனது அடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கு மற்றும் இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவிட்டு, தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர் அந்த வன நடிகை. அவரது நடிப்பை விட நடனத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.

    தனது முதல் படம் வெளியாவதற்கு முன்னரே அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியிருந்த நடிகைக்கு, மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறாராம்.



    ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட சில பிரச்சனைகளால், தனது முதல் படம் பெரிய வரவேற்பை பெறாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதால், தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவால் அவரது காட்டில் கனமழை கொட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    மீண்டும் கவர்ச்சியாக நடிக்கலாமா? என்று சூப்பர்ஸ்டார் நடிகை ஆழ்ந்த யோசனையில் இருந்து வருகிறாராம்.
    தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகை. அவர் தேர்வு செய்து நடித்து வரும் அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்றாற் போல், அவரும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்று கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நாயகருடன் இரு படங்களில் நடிகை நடித்திருக்கும் போது, மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.



    ஆனால் அந்த படத்தில் நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புகிறாராம். தெலுங்கு திரையுலகத்தை பொறுத்த வரையில், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகைகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.

    நடிகை தொடக்கத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்போது நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளதால், மீண்டும் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசிக்கிராராம். எனவே அந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நடிகை தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    மார்க்கெட் இல்லாவிட்டாலும் சிலபேர்களுடன் நடிக்கமாட்டேன் என்று ஒரு நடிகை அடம்பிடிக்கிறாராம்.
    சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நடிகைக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்றெழுத்து படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்கவும் முன்வந்தார்களாம். ஆனால்,  அப்படி கீழிறங்கி சென்றால், முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து அவர்களுடன் நடிக்காமல் ஒதுங்கிவிட்டாராம் நடிகை.



    தற்போது நடன நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அந்த நடிகைக்கு இந்த படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என மனதுக்குள் கனவுக் கோட்டை கட்டியுள்ளாராம்.
    புகைப்படத்தை பார்த்து எல்லாம் சுத்தப் பொய் என்று ஒரு நடிகை பதறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    உலக நாயகர் பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றும் நடிகர், நடிகைகள் விவரங்களும் அறிவிக்கப்பட்டு, அவர்களையும் ஒரு வீட்டுக்குள் போட்டு அடைத்து விட்டார்கள்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னேர லட்சுமிகரமான ஒரு நடிகை இந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த புகைப்படத்தில் தன்னுடைய படமும் இடம்பெற்றிருப்பதை பார்த்தத அந்த லட்சுமிகரமான நடிகை ரொம்பவும் பதறிப் போய்விட்டாராம்.



    அந்த நிகழ்ச்சியில் நான் கிடையவே கிடையாது. அந்த செய்தியில் சொல்வதெல்லாம் சுத்தப் பொய். உண்மை கிடையாது என்று உடனடியாக விளக்கமும் கொடுத்தாராம். ஏன் அந்த நடிகை அப்படி பதறினார்? இதை சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம், ஏன் நடிகை பதற்றத்துடன் கூறவேண்டும்? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம்.

    இதுகுறித்து வாய் திறக்காவிட்டால் தன்னைப் பற்றி ஏதாவது புரளியை கிளப்பி விட்டுவிட்டார்கள் என்று பயந்துதான் அப்படி பதற்றத்துடன் நடிகை கூறியதாகவும் கூறப்படுகிறது.
    பிரபல நடிகை ஒருவர் வாய்ப்புக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
    ஹாலிவுட் வரை பிரபலமானவர் அந்த பிரியமான பாலிவுட் நடிகை. இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படத்தில் மிகவும் கவர்ச்சியாக வலம்வந்து ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகையை தேடி வருவதாக பாலிவுட்டில் ஒரு செய்தி அடிபட்டு வருகிறது.

    இந்நிலையில், நடிகை உடலமைப்பில் கவர்ச்சியாக தெரிந்தாலும், தன்னுடைய மூக்கு அவரது கவர்ச்சியை கெடுத்து வருவதாக அவருக்கே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத அந்த நடிகை தற்போது அதன்மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம்.



    இதற்காக சமீபத்தில் தனது மூக்கை சர்ஜரி செய்துகொண்டாராம். ஏற்கெனவே நிறைய நடிகைகள் செய்துகொண்ட விஷயம்தான் என்றாலும், தனக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காகவே அந்த நடிகை இதுபோல் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. 
    ×