என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கணவரை பிரிந்த பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்று வெளியாவதற்கு பிரச்சனைகள் எழுந்ததால் தன் பணத்தை செலவு செய்து படத்தை வெளியிட்டாராம்.

    தற்போது அதே போல் இவர் நடித்த மற்றொரு படமும் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். இதை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நடிகையை அணுக, அவரோ உங்க படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.
    வளர்ந்து வரும் நடிகை ஒருவர் புதிய படத்தில் சிறிது நேரம் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம்.
    சமீபத்தில் வளர்ந்த நடிகைகளில் சிலர் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்களாம். வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை, இந்த பட்டியலில் இணைந்துள்ளாராம். சமீபத்தில் வெளியான படத்துக்கு பிறகு நடிகையின் மார்க்கெட் உயந்துள்ளதாம்.

    அந்த படத்துக்கு முன்பு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய நடிகை இப்போது ரூ.4 கோடி கேட்கிறாராம். இந்த நிலையில் ஒரு படத்தில் அரைமணி நேரம் நடிக்க நடிகையை அணுகியபோது ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்த தொகையை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதித்ததாக கூறுகின்றனர்.
    பிரபல நடிகை ஒருவர் தனக்கு பிடித்த நடிக்கருடன் நடிக்க ஆசைப்பட்டு அவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
    ‘சாமி’ நடிகர் திரையுலகுக்கு வந்த நேரத்தில், அவருடைய அழகான தோற்றம் பிரபல கதாநாயகிகளை கவர்ந்து இழுத்ததாம். கதாநாயகனாக நடித்து வந்த அவர், இப்போது வில்லனாகி விட்டாராம். இருப்பினும் அவர் சில கதாநாயகிகளின் ‘கனவுக்கண்ணனாகவே இருந்து வருகிறாராம்.

    குறிப்பாக ஒரு பிரபல கதாநாயகி, ‘சாமி’ நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் தனக்கு ஜோடியாக, ‘சாமி’ நடிகரை ஒப்பந்தம் செய்யும்படி சிபாரிசு செய்து இருக்கிறாராம்! அவருடைய ரசனையை அறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம், கதை சொல்ல வந்த புது டைரக்டர்!
    முன்னணி நடிகை ஒருவர் பிரபல இயக்குனருக்கு சில கட்டுப்பாடுகள் விதித்ததால், நடிகை மீது இயக்குனர் கோபத்தில் இருக்கிறாராம்.
    பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரம்மாண்ட இயக்குனர் தெலுங்கு நடிகரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறாராம். இதில் இரண்டாவது நடிகையாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம். நடிகை, 2வது நடிகையா.. அப்போ சம்பளம் அதிகம் வேண்டும், படப்பிடிப்பு தளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்தாராம்.

    இதைக்கேட்ட இயக்குனர் கோபத்தில், இந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என்று சொல்லி, ஆளை மாற்றி விட்டாராம். இதையறிந்த நடிகை தற்போது பெரிய பட வாய்ப்பை இழந்து விட்டேன் என்று புலம்பி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மிகவும் பிசியாக படப்பிடிப்புக்கு சென்று வந்தாராம். ஊரடங்கில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்ததால் நடிகைக்கு சோர்வு அதிகமாகி விட்டதாம்.

    ஊரடங்கு தளவிற்குப் பிறகும் நடிகை படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம். நடிகையை படப்பிடிப்புக்கு அழைத்தால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை, எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது என்று சொல்லி வர மறுக்கிறாராம். நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கடுப்பில் இருக்கிறார்களாம். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையை இயக்குனர் ஒரு கண்டுக்கொள்ள வில்லையாம்.
    அழகா, குண்டாக இருந்த நடிகையை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்ததாம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாராம். அவர் எடையை குறைத்ததோடு மார்க்கெட் மரண அடி வாங்கிவிட்டதாம். ஒல்லியான பிறகு நடிகையை பார்க்க பரிதாபமாக, வயதானவர் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்களாம். 

    நடிகை அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறாராம். பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், யாருமே கண்டுகொள்வது இல்லையாம். இதனால் தன்னை வைத்து பேய் படம் எடுத்த இயக்குனரை அழைத்து பட வாய்ப்பு கேட்டாராம். இயக்குனரோ நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
    தமிழில் இளம் நடிகராக வலம் வருபவர் திருமணம் செய்து கொள்ள பயப்படுகிறாராம்.
    வெற்றியை குறிக்கும் இரண்டெழுத்தில் பெயரை கொண்ட நடிகருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர், மணப்பெண் வேட்டை நடத்தி வந்தார்களாம். அந்த வேட்டையை உடனே நிறுத்தும்படி குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டாராம், நடிகர்.

    சமீபத்தில் நடந்த நட்சத்திர மணமுறிவுகளே இதற்கு காரணமாம். இதனால் கொஞ்ச நாளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று பயத்தோடு சொல்லுகிறாராம் நடிகர்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர், பட வாய்ப்பு வந்தவுடன் ஓவர் கெத்து காண்பிக்கிறாராம்.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறாராம். இவர் கடந்த ஆண்டு ஒரு சில பிரச்சனைகளில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்தாராம். இதனால், எங்கேயும் பேசாமல் வாயை மூடி இருந்தாராம்.

    தற்போது நடிகையை தேடி ஐந்து, ஆறு படங்கள் வந்திருக்கிறதாம். இதனால், ஓவர் கெத்து காட்ட ஆரம்பித்து இருக்கிறாராம். போகிற இடங்களில் எல்லாம் ஓவராக பேசி வருகிறாராம். நடிகையின் செயலை பார்த்தவர்கள் பலரும் பட வாய்ப்பு வந்தவுடன் கெத்தா... என்று பேசி வருகிறார்களாம்.
    பிரபல நடிகை ஒருவர், நடிகர் சிபாரிசு செய்யும் படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகராக இருப்பவருடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, சில காலங்களில் காணாமல் போயிருந்தாராம். அதன்பிறகு பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். உடல் எடையையும் குறைத்து படங்களில் நடிக்க தயாரானாராம்.

    அதன்பிறகு தான் முதலில் நடித்த ஒல்லி நடிகருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டாராம். நடிகரோ வாய்ப்பு தருகிறேன் என்று கூறி இதுவரை எதுவும் தரவில்லையாம். விடாமல் நடிகரை தொந்தரவு செய்ததால், நடிகைக்கு வேறு படங்களில் நடிக்க சிபாரிசு செய்தாராம் நடிகர். ஆனால், நடிகை உங்களுடன்தான் நடிப்பேன் என்று விடாபிடியாக இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகரை நினைத்து புலம்பி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவில் ஓவராக பேசி பலருடைய கண்டனத்தை பெற்றாராம். இவர் நடித்த படம் ஒருவழியாக திரைக்கு வந்ததாம். அந்த படத்தை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்கள் வந்ததால் நடிகர் கவலையில் இருக்கிறாராம்.

    இவரைவிட பெரிய கவலையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். ஏனென்றால் நடிகரை நம்பி போட்ட பணம் எல்லாம் வீணாகி விட்டதாம். அவர் பேசிய வார்த்தைகள் படம் நஷ்டமடைய காரணம் என்று பலரிடம் தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
    நடிகைகள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயார் என்று கூறி பிரபல நடிகர் ஒருவர் சில கண்டிஷன்களை போட்டு இருக்கிறாராம்.
    மூன்றெழுத்து நடிகர் ஒருவர், சமீபத்தில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததன் காரணமாக, அடுத்த படங்களில் பிரபல நடிகைகளை நடிக்க வைத்தாவது வெற்றியடைய வைத்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். அதுவும் அந்த நடிகைகளுக்கு சில கண்டிஷன்களையும் போடுகிறாராம்.

    அது என்னவென்றால், பாடல் காட்சிகளில் டூ-பீஸ் உடைகளில் நடிக்க வேண்டும், லிப்லாக் காட்சிகளில் நடிக்க தயங்கக் கூடாது என அடுக்கடுக்கான கண்டிஷன்களை போடுகிறாராம். மேலும் அந்த நடிகைகள் சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயார் என்று அதிரடி ஆபர்களையும் வழங்கி வருகிறாராம்.
    பட வாய்ப்பின்றி திண்டாடி வரும் நான்கெழுத்து நடிகை ஒருவர், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    டோலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நான்கெழுத்து நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறாராம். வரும் ஒன்றிரண்டு வாய்ப்புகளும், கதை தனக்கு ஏற்றபடி இல்லை என சொல்லி திருப்பி அனுப்பி விடும் அந்த நடிகை, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

    பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். தனக்கு ஏற்ற கதையை பார்த்து தேர்ந்தெடுப்பதற்காக தனியாக ஒரு குழுவையும் அமைத்துள்ளாராம் அந்த நடிகை. நடிகையின் இந்த பலே திட்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    ×