'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடித்துள்ளனர். தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் நாளை (ஏப்ரல் 18) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் திருமணத்தில் கமல்ஹாசனும் சிம்புவும் இணைந்து நடனமாடுவது கவனம் ஈர்த்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com