என் மலர்

  சினிமா செய்திகள்

  மகனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி
  X

  விஜய் சேதுபதி

  மகனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’.
  • இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கிறார்கள்.

  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

  சூர்யா - விஜய் சேதுபதி

  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  சூர்யா - விஜய் சேதுபதி

  இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன்பு தனது தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×