என் மலர்
சினிமா செய்திகள்

VIDEO: கலைக்கல்லூரியில் டாக்டர் மாணவர்களா? - ஸ்ரீலீலா பேச்சால் விழுந்து விழுந்து சிரித்த SK
- பராசக்தி டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் ப்ரோமோஷன் பணிகளில் பராசக்தி படக்குழு ஈடுபட்டது. அப்போது மாணவர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீலீலா இங்கு எத்தனை டாக்டர் உள்ளனர் என்று கேட்டுள்ளார். கலைக்கல்லூரியில் எத்தனை டாக்டர் உள்ளனர் என்று ஸ்ரீலீலா கேட்டதால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. சிவகார்த்திகேயனும் அதர்வாவும் இதனை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.






