என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்டைலில் பேசிய சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ
    X

    பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்டைலில் பேசிய சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ

    • பராசக்தி படம் ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
    • நேற்று பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. அதே சமயம் நேற்று பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "எதே ஜெயம் ரவியா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று ரஜினி போலவே பேசியது இணையத்தில் வைரலானது.

    கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "எதே நாகர்ஜுனாவா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×