என் மலர்
சினிமா செய்திகள்

எல்லைத் தாண்டிய ஒரு படத்தை உருவாக்கியதற்கு வாழ்த்துகள்- சிவகார்த்திகேயன்
- ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் 40,000 திரைகளில் வெளியாகியுள்ளது.
சீனாவில் 'டங்கல்' திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்ற தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது.
இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படம் சீனாவில் பிரமாண்டமாக வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மகாராஜா சீனாவில் பிரமாண்டமாக வெளியானது!
இந்த சாதனையைப் பற்றி பெருமைப்படுவதோடு, அங்கும் இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கும் வாழ்த்துகள். மேலும் எல்லைத் தாண்டிய ஒரு படத்தை உருவாக்கியதற்காக சுதன் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






