என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது - அஜித் வசனத்தை பேசிய ரஜினிகாந்த்... அதிர்ந்த அரங்கம்
    X

    நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது - அஜித் வசனத்தை பேசிய ரஜினிகாந்த்... அதிர்ந்த அரங்கம்

    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
    • கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

    அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், " லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ. ஒரிஜினால் ஆக நான் வில்லன்மா. நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று வெங்கட் பிரபு அஜித்துக்கு எழுதிய டயலாக் போலவே, நாகார்ஜுனா கேரக்டர் பண்ணி இருக்காரு" என்று தெரிவித்தார்.

    மங்காத்தா படத்தில் அஜித் பேசிய வசனத்தை விழாவில் ரஜினிகாந்த் பேசியது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    Next Story
    ×