ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் - அனிருத் காம்போ: நாளை வெளியாகிறது 'புரோமோ' வீடியோ!

புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும் இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் - அனிருத் காம்போ: நாளை வெளியாகிறது 'புரோமோ' வீடியோ!
Published on

45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை 12:07 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி தனது தற்போதைய படங்களான ஜெயிலர் 2 மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சனின் முந்தைய படமான 'ஜெயிலர்' பாணியிலேயே, இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை வெளியாகவுள்ள புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com