என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜுன் 27 ஆம் தேதி  வெளியாகும் கல்கி 2898 ஏ.டி
    X

    ஜுன் 27 ஆம் தேதி வெளியாகும் 'கல்கி 2898 ஏ.டி'

    • படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

    நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியது. படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. பல நட்சத்திர நடிகர் பட்டாளம் நடித்ஹ்டிருக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×