என் மலர்

  சினிமா

  விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் - சவுந்தரராஜா
  X

  விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் - சவுந்தரராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சவுந்தரராஜா, விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
  சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் படத்தில் நடித்தது குறித்து சவுந்தரராஜா பேட்டி ஒன்றில் கூறியதாவது: 

  ‘தளபதி 63 படத்தில் எனக்கு வெறும் 6 காட்சிகள் தான். படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அட்லி தெரிவித்துள்ளார். அதனால் நான் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. ஆனால் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் ஏற்கனவே தெறி படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் தனது காட்சிகளை அவ்வளவாக ஒத்திகை பார்க்க மாட்டார்.   அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். விஜய் வந்த உடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். விஜய் பெரும்பாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவரின் அந்த திறமையை பார்த்து வியக்கிறேன். அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். 

  காபி என்னும் திரைப்படத்தில் நான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வருகிறேன். சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×