என் மலர்

  சினிமா

  குடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்
  X

  குடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தை குடியரசு தினத்தில் தொடங்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். #Dhanush #Asuran
  தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

  இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது ஏற்கனவே செய்திகள் வெளியானது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி தொடங்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். #Dhanush #Asuran
  Next Story
  ×