search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    முக்கிய கட்டத்தில் விஜய் சேதுபதியின் சிந்துபாத்
    X

    முக்கிய கட்டத்தில் விஜய் சேதுபதியின் சிந்துபாத்

    சேதுபதி படத்தை தொடர்ந்து அருண்குமார் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் சிந்துபாத் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். #Sindhubaath #VijaySethupathi
    `பேட்ட' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்' படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Sindhubaath #VijaySethupathi

    Next Story
    ×