என் மலர்
சினிமா

கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித் என்று மாலைமலருக்கு பேட்டியளித்துள்ளார். #Viswasam #Ajith
சிவா - அஜித் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வீரம், வேதாளம், விவேகம்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால், இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
இப்படம் குறித்து மாலைமலருக்கு இயக்குனர் சிவா அளித்த பேட்டியளித்தார். இதில் விவேகம் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்திடம் நிறைய வேலை வாங்கி இருக்கீங்க? அதுபோல் இந்த விஸ்வாசம் படத்தில் அதிக வேலை வாங்கி இருக்கீங்களா? என்ற கேள்விக்கு, ‘கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித். அவரை பொறுத்தவரை ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக இருக்க விரும்புவார்.

என் படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிக மெனக்கெடுவேன். திலிப் சுப்பராயன் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை பிரமாதமாக அமைத்திருக்கிறார். அவருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்தளவிற்கு திறமையாக வேலை செய்திருக்கிறார். அஜித்தின் கம்பீரத்தை சண்டைக் காட்சிகளில்தான் காண்பிக்க முடியும். அதை நாங்கள் சரியாக செய்து வருகிறோம் என்று நம்புகிறோம்’ என்றார். #Viswasam #Ajith
Next Story






