என் மலர்
சினிமா

2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.
தமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.

ஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள். #2Point0 #Rajini
Next Story






