என் மலர்

  சினிமா

  ரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்
  X

  ரஜினியுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்துடன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் காஞ்சனா 3 படத்தின் டீசர் இணைந்துள்ளது. #Petta
  ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்த படத்தில் வேதிகா மற்றும் ஓவியா கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும், இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

  படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோ‌ஷன் போஸ்டருடன் கூடிய பர்ஸ்ட் லுக் டீசரை ‘பேட்ட’ படத்துடன் வெளியிட முடிவு செய்துள்ளனர்.  ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார். கோடை விடுமுறையை கணக்கில் கொண்டே, இந்த தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு. ‘காஞ்சனா’ படத்தின் 2 பாகங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
  Next Story
  ×