என் மலர்
சினிமா

ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா
96 படத்தை தெலுங்கில் மறுஉருவாக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், தான் அதில் நடிக்கவில்லை என்றும், ரீமேக் வேண்டாம் என்றும் சமந்தா கூறியிருக்கிறார். #96TheMovie #Samantha
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு, பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.
Shouldn’t be remade 😊 https://t.co/1ia5GhtvSr
— Samantha Akkineni (@Samanthaprabhu2) October 17, 2018
முன்னதாக 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை குறிப்பிட்டு “என்ன ஓர் அற்புதமான நடிப்பு. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா வேடத்தில் நடிக்க வேறு நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #96TheMovie #Trisha #Samantha
Next Story






