என் மலர்

  சினிமா

  இயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
  X

  இயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் இயக்குனர் மணிரத்னத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். #CCV #Maniratnam
  மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×