என் மலர்

  சினிமா

  ஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்
  X

  ஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், துரைசிங்கமான சூர்யாவும், ஆறுச்சாமியான விக்ரமும் ஒரே படத்தில் இணைவது குறித்து ஹரி விளக்கம் அளித்துள்ளார். #Hari #SaamySquare
  ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஹரி அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து,

  ஒரு பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பது எளிதில்லையே?

  ஒரு படத்தோட அடுத்தடுத்த பாகங்களை இயக்க வேண்டுமே என்று இறங்கிவிட்டு, பின்னர் யோசித்தால் அது கஷ்டம் தான். ஆனால் கதை இருக்கும் போது, அந்த கதையுடன் பயணிக்க வேண்டி இருந்தால் பயம் தேவையில்லை. வேலை பளு, வேலைக்காக மெனக்கிட வேண்டிய பரபரப்பு தான் இருக்கும். இந்த படம் வரை போலீஸ் ஸ்கிரிப்ட் எனக்கு திருப்தி தான். ஒருவேளை அடுத்த படம் பண்ணும் போது எனக்கு அந்த பயம் வரலாம்.

  சாமி ஸ்கொயர் வெறும் போலீஸ் கதையாக மட்டும் இருக்காது. என்னுடைய படங்களில் என்னென்ன இருக்குமோ, அதை கொடுத்திருக்கிறேன். அதில் எந்த குறையும் இருக்காது. ஒரு புல்மீல்ஸ் சாப்பிடுவது போல் தான் இருக்கும். 

  குடும்பம் சார்ந்த படங்களாக எடுப்பது ஏன்? 

  ஹீரோவுக்கு யாருமே இல்லை என்று நான் படங்கள் பண்ணுவதில்லை. யாராவது ஒருவர் ஹீரோவுக்கு உயிராக இருப்பது போல் தான் இயக்கியிருக்கிறேன். ஆறு படத்தில் மட்டும் தான் அப்படி இருக்காது. வில்லனாகவே இருந்தாலும், தன் பையன் தப்பு செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் வில்லனை காட்டுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கும். வில்லனுக்கே இப்படி யோசிக்கும் போது ஹீரோவுக்கு குடும்பம் இல்லையென்றால் எப்படி? என்று தோன்றும்.   துரைசிங்கம், ஆறுச்சாமி ஒரே படத்தில் இணைவார்களா?

  சிங்கம் 3 படத்தில் ஒரு காட்சியில் துரைசிங்கம், ஆறுச்சாமி இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லை. இருவருமே மிகப்பெரிய ஸ்டார்கள். ஒரு சிறிய காட்சிக்கு அவர்களிடம் சென்று கேட்பது சரியாக இருக்காது.

  டிரைலர்ல ஆறுச்சாமி ஆவி ராமசாமி மேல வருவதுபோல் இருக்கிறதே?

  படத்துல ஆறுச்சாமியே இருக்கிறாரே, அப்புறம் ஏன் ராமசாமி உடம்பில ஆறுச்சாமி வரப்போகிறார். இருவருமே படத்தில் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள். #Hari #SaamySquare #Vikram #Suriya

  ஹரி பேசிய வீடியோவை பார்க்க:


  Next Story
  ×