என் மலர்

  சினிமா

  பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
  X

  பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட சினேகன், தற்போது விழாவில் கலந்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார். #BiggBoss
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் கவிஞர் சினேகன். இப்போது நடக்கும் பிக்பாஸ் சீசன் 2 விலும் அந்த வீட்டுக்கு சினேகன் சென்று வந்தார். நேற்று நடந்த பேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழாவில் சினேகன் கலந்துகொண்டார்.

  புதுமுக நடிகை டோனா சங்கர் என்பவர் தமிழ் சினிமாவில் ‘பேய் எல்லாம் பாவம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அரசு கதாநாயகனாக நடிக்கிறார்.

  மேலும் படத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜித் ரவி, தர்‌ஷன், சிவகுமார், ரசூல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு நவீன் ‌ஷங்கர் இசையமைக்கிறார். படத்தை ஹன்ஸிபாய் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தீபக் நாராயணன் இயக்கி இருக்கிறார். 

  நிகழ்ச்சியில் சினேகன் பேசும்போது, ‘நான் 2500 பாடல்கள் எழுதி உள்ளேன். அப்போது கிடைக்காத அடையாளம் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கிடைத்தது. அங்கு நாம் முழுமையாக என்ன செய்தோம் என்று தெரியாது. அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்பினார்கள். அது வியாபாரத்துக்காக செய்தது. குறை கூற முடியாது.’ என்று பேசினார்.


  Next Story
  ×