என் மலர்
சினிமா

தனி ஒருவன் 2 - ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக இணையும் இரு நாயகிகள்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, சாயிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi
2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர்.
இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.
வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடிபோட்ட சாயிஷாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வனமகன் படத்தில் தான் சாயிஷா தமிழில் அறிமுகமானார்.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் சுட்டுக் கொல்லப்பட்டது போலக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது. அனேகமாக ஜெயம் ரவியே ஹீரோ, வில்லன் என்று 2 வேடங்களில் நடிக்கலாம் என்று கூறுகிறார்கள். #ThaniOruvan2 #JayamRavi #Nayanthara #Sayyeshaa
Next Story






