என் மலர்

  சினிமா

  காதலியைக் கரம்பிடித்த டேனியல்
  X

  காதலியைக் கரம்பிடித்த டேனியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த டேனியல் நேற்று வெளியான நிலையில், இன்று காதலியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Danny #BiggBoss
  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

  இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

  வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.  வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் டேனியல் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×